வனிதா குறித்த கேள்வி.. நாசூக்காக தவிர்த்த அருண் விஜய்.. குடும்பத்தை படத்துலதான் சேர்த்து வைப்பாரா?

சென்னை : நடிகர் அருண் விஜய் எப்போதும் தன்னுடைய தங்கைகளுடன் சுமூகமான உறவை வைத்திருக்கிறார்.

Recommended Video

Arun Vijay | School Friends தான் நல்லது கெட்டது இரண்டையும் சொல்லுறவங்க | *Interview

தனது தங்கை கணவர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் யானை படம் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்று வசூலையும் குவித்து வருகிறது.

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். மிகப்பெரிய நடிகரின் மகன் என்ற போதிலும் இவர் தன்னை கோலிவுட்டில் நிரூபிக்க நீண்ட காலங்கள் போராட வேண்டியிருந்தது. பல சொதப்பல்களை தொடர்ந்தே இவர் தன்னுடைய கதைத் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிப் படங்களை கொடுத்தார்.

என்னை அறிந்தால் படம்

என்னை அறிந்தால் படம்

அஜித்துடன் இவர் நடித்திருந்த என்னை அறிந்தால் படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தில் வில்லன் கேரக்டரில் மிரட்டியிருந்தார். இவருக்கு சிறப்பான மற்றும் சமமான வாய்ப்பை இந்தப் படம் கொடுத்திருந்தது. அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் அருண் விஜய்.

சிறப்பான படங்கள்

சிறப்பான படங்கள்

இந்தப் படத்திற்கு பிறகு மிகவும் சிறப்பான கதைக்களங்களில் நடித்து தன்னை கோலிவுட்டில் நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். முன்னதாகவே இவரது நடிப்பில் வெளியான தடையறத் தாக்க உள்ளிட்ட படங்களும் ரசிகர்களின் விருப்பத்திற்குரியவைகளாகவே அமைந்தன. ரசிகர்களும் இந்தப் படங்களை சிறப்பான வெற்றிப் படங்களாக்கினர்.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய்

இந்நிலையில் தற்போது தன்னுடைய தங்கை கணவர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் யானை என்ற படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தற்போது சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்து வருகிறது. ஹரியின் சமீபத்திய படங்கள் அவருக்கு சரியாக கைக்கொடுக்கவில்லை.

 சிறப்பான விமர்சனங்கள்

சிறப்பான விமர்சனங்கள்

இந்நிலையில் யானை படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் அவர் தன்னுடைய அண்ணன்களுடன் மீண்டும் சேர சிறப்பான முயற்சிகளை மேற்கொள்வதாக படம் அமைந்துள்ளது. இதனிடையே இவரது குடும்பத்தில் இருந்த வனிதா விலகியுள்ள நிலையில், அவரை மீண்டும் அருண் விஜய் தங்கையா ஏற்றுக் கொள்வாரா என்று சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

பதிலளிக்காத அருண் விஜய்

பதிலளிக்காத அருண் விஜய்

ஆனால் இந்தக் கேள்விக்கு அருண் விஜய் எந்த வித பதிலையும் அளிக்கவில்லை. மாறாக சிரிப்பையே பதிலாக கொடுத்தார். இந்தப் படத்தின் வெளியீட்டின்போது படத்தின் வெற்றிக்கு வனிதா வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். அவர் தன்னுடைய குடும்பத்தினருடன் சேர துடித்துவருவது அவரது நடவடிக்கைகள் மூலம் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X