மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக அப்பா, மகனுடன் மரக்கன்று நட்ட பிரபல நடிகர்!
சென்னை: மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக அப்பா மற்றும் மகனுடன் சேர்ந்து பிரபல நடிகர் மரக்கன்று நட்ட போட்டோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் விவேக்.
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விவேக், பத்மஸ்ரீ, பிலிம் பேர், தமிழக அரசின் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

ஐசியூவில் சிகிச்சை
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீர் மாரடைப்பால் சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் விவேக். ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அதிர்ச்சியும் சோகமும்
ஆனால் சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் கடந்த சனிக்கிழமை காலை மரணமடைந்தார். அவரது மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குடும்பத்துடன் சேர்ந்து
அதோடு நடிகர் விவேக்கின் நினைவாக பலரும் மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அருண் விஜய், தனது மகன் மற்றும் தனது அப்பா விஜயக்குமாருடன் சேர்ந்து வீட்டில் மரக்கன்று நட்டுள்ளார்.

நன்றி விவேக் சார்
அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள அருண் விஜய், பசுமையான கிரகத்தை வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்குக் கற்பித்தல் !! எங்களை ஊக்கப்படுத்திய விவேக் சாருக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
லெஜண்ட் சரவணா
அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விவேக் கடைசியாக லெஜண்ட் சரவணா படத்தில் நடித்தார். இந்தப் படத்தின் நடிகர் விஜயக்குமாரும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











