For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அருண் விஜய்யின் ஏவி31 படம் ஒரு ஸ்பை த்ரில்லர்.. இதுதான் டைட்டில்.. வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

    |

    சென்னை: அருண் விஜய் நடிக்கும் 31வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

    Wife அ விட்டுக்கொடுக்க முடியாது but இவங்க தான் எல்லாம் | Arun Vijay speech | Filmibeat Tamil

    அருண் விஜய் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான படம் 'குற்றம் 23'. இந்தப் படத்தை இயக்கியவர் அறிவழகன்.

    விஜய் சேதுபதிக்கு நடிப்பு கற்றுத் தந்த நடிகை....வைரலாகும் வீடியோ

    இவர் மீண்டும் அருண் விஜய்யுடன் இணைந்து திரில்லர் படத்தை இயக்கி வருகிறார்.

    தற்காலிக தலைப்பு

    தற்காலிக தலைப்பு

    அருண் விஜய்யின் 31 ஆவது படமான இந்தப் படத்திற்கு 'AV31' என்று தற்காலிகமாக தலைப்பு வைத்திருந்தனர். இந்தப் படத்தில் ரெஜினா, ஸ்டெஃபி பட்டேல் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

    பார்டர் என தலைப்பு

    பார்டர் என தலைப்பு

    இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதன்படி படத்திற்கு பார்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    ஸ்பை த்ரில்லர்

    ஸ்பை த்ரில்லர்

    AV 31 படத்தை இந்தியாவில் வெளியிடும் உரிமையை 11:11 புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் பார்டர் திரைப்படம் ஒரு ஸ்பை த்ரில்லர் படமாக இருக்கும் என்றும், 90களில் வெளியான அர்ஜூன் மற்றும் விஜயகாந்த் படங்களை போன்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    உளவாளியா? தீவிரவாதியா?

    உளவாளியா? தீவிரவாதியா?

    இந்தப் படத்தில் அருண் விஜய், பாதுகாப்புத்துறையின் உளவாளியாக நடித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ரெஜினா கெசன்ட்ரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அவர் உளவாளியா அல்லது தீவிரவாதியா என்ற தகவல் வெளியாகவில்லை.

    கொண்டாடப்படும் படம்

    கொண்டாடப்படும் படம்

    புதுமுகமான ஸ்டெபி பட்டேல் அருண் விஜய்யின் காதலியாக நடித்துள்ளார். மொத்தத்தில் இந்தப் படம் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    English summary
    Actor Arun Vijay's AV31 first look released. Movie tittled as Border directed by Arivazhagan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X