Mission Chapter 1 :விஜய் + விஜய்யின் மிஷன் சாப்டர் ஒன் டீசர்.. சும்மா அதிருதே!

சென்னை : நடிகர் அருண்விஜய் மற்றும் இயக்குநர் ஏஎல் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் மிஷன் சாப்டர் 1. முன்னதாக அச்சம் என்பது இல்லையே என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் தலைப்பு தற்போது மாற்றப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

படத்தின் மிரட்டலான டீசர் நேற்றைய தினம் வெளியாகியுள்ள நிலையில் சில மணிநேரங்களிலேயே 5 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது.

Actor Arun vijays Mission chapter 1 movie teaser released

அருண் விஜய் படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் அருண் விஜய் அடுத்தடுத்த தேர்ந்தெடுத்தக் கதைக்களங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்த அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது மிஷன் சாப்டர் 1 படம். இந்தப் படம் முன்னதாக அச்சம் என்பது இல்லையே என்று தலைப்பிடப்பட்ட நிலையில் தற்போது டைட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் லண்டனில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தில் எமி ஜாக்சன் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளது. மலையாளத்தில் கவனத்தை பெற்றுள்ள நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். லண்டன் சிறையில் வாடும் தவறாக தண்டிக்கப்பட்ட கைதிகளை மீட்கும் கதைக்களத்தில் இந்தப் படம் பயணித்துள்ளது..

Actor Arun vijays Mission chapter 1 movie teaser released

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் ரிலீசாகவுள்ளது.. முன்னதாக அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை படம் சிறப்பான வெற்றியை பெற்ற நிலையில், இந்தப் படமும் அருண் விஜய் ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் எமி ஜாக்சனும் இணைந்துள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வெளியான சில மணிநேரங்களிலேயே படத்தின் டீசர் 5 லட்சம் வியூஸ்களை தாண்டியுள்ளது. படத்தின் அதிகமான சூட்டிங் லண்டனில் எடுக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் சில காட்சிகள் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் உள்ளிட்டவை குறித்து படக்குழு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Actor Arun vijays Mission chapter 1 movie teaser released

கோலிவுட்டில் தன்னுடைய கேரக்டருக்காக மிகவும் மெனக்கெடும் ஹீரோக்களில் அருண் விஜய்யும் ஒருவர். அந்த வகையில் மிஷன் சாப்டர் ஒன் படத்தின் மிரட்டலான காட்சிகள் அதன் டீசரில் மிகச்சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. முன்னதாக படத்தை லைகா கைப்பற்றியதன் வீடியோ ஒன்றும் படக்குழுவினரால் பகிரப்பட்ட நிலையில், ரசிகர்கள் அந்த வீடியோவை அதிகமாக லைக் செய்தும் பகிர்ந்தும் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X