கோவமான சிங்கம்.. அருண் விஜய்யின் சினத்தை பார்க்க தயாரா.. இதோ மிரட்டலான ட்ரெயிலர்!

சென்னை : நடிகர் அருண் விஜய் சிறப்பான பல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.

நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற பின்புலத்துடன் நடிக்க வந்தாலும், தன்னை சிறப்பான நடிகராக நிரூபிக்க இவர் அதிகமான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

அருண் விஜய்யின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் பார்டர் மற்றும் சினம் வெளியாகவுள்ளன. இதற்கான பிரமோஷன்களும் துவங்கியுள்ளன.

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய்

கடந்த 1995ம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய்.இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சுந்தர் சி. இந்தப்படம் இவருக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்திருந்தாலும் வாய்ப்புகளை அதிகமாக பெற்றுத் தரவில்லை. தொடர்ந்து தன்னை சிறந்த நடிகராக நிரூபிக்க பல கட்டங்களில் இவர் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தொடர்ந்து 1998ம் ஆண்டில் வெளியான துள்ளித் திரிந்த காலம் படம் இவருக்கு ஓரளவிற்கு கைக்கொடுத்தது. இந்தப் படத்தில் ரோஷினி, குஷ்பூ இவருடன் இணைந்து நடித்திருந்தனர். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான மலை மலை, மாஞ்சா வேலு, தடையறத் தாக்க படங்களும் இவருக்கு சிறப்பாக அமைந்தது.

என்னை அறிந்தால் படம்

என்னை அறிந்தால் படம்

ஆனால் இவருக்கு சிறப்பை கொடுத்தப் படம் என்றால் அஜித்திற்கு வில்லனாக கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த என்னை அறிந்தால் படம்தான். இந்தப் படத்தில் இவருக்கு அமைந்த அழுத்தமான கேரக்டரில் சிறப்பான நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து இவருக்கு அமைந்ததெல்லாம் சிறப்பான கேரக்டர்கள்தான்.

ஹரி இயக்கத்தில் யானை படம்

ஹரி இயக்கத்தில் யானை படம்

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியானது யானை படம். தன்னுடைய மச்சான் ஹரி இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது. நல்ல வெற்றியை கொடுத்தது. படத்தில் பிரியா பவானி சங்கர், அருண் விஜய்க்கு ஜோடியாகியிருந்தார். கிராமத்து கெட்டப்பில் அருண் விஜய் இந்தக் கேரக்டரை சிறப்பாக்கியிருந்தார்.

சினம் -பார்டர் படங்கள்

சினம் -பார்டர் படங்கள்

இந்நிலையில் அடுத்ததாக குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள சினம் படம் வரும் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தொடர்ந்து இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் பார்டர் படமும் வரும் அக்டோபர் 5ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்தப் படங்களின் ரிலீஸ் தற்போது அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சினம் படத்தின் ட்ரெயிலர்

சினம் படத்தின் ட்ரெயிலர்

இந்நிலையில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சினம் படத்தின் ஆக்ரோஷமான ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் இன்ஸ்பெக்டராக ஆக்ரோஷம் காட்டியுள்ளார் அருண் விஜய். ஒரு வழக்கை கண்டுபிடிப்பதாக கதைக்களம் காணப்படுகிறது. இடையில் அழகான காதலும் காணப்படுகிறது.

வெறித்தனமான நடிப்பு

வெறித்தனமான நடிப்பு

அருண் விஜய் தனக்கு ஆரம்பத்தில் கிடைக்காத பட வாய்ப்புகளுக்கும் சேர்த்து வைத்து தற்போது அதிகமான படங்களில் நடித்து வருகிறார். யானை படத்தை தொடர்ந்து பார்டன், சினம் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படங்களை தொடர்ந்து விஜய் ஆண்டனியுடன் அவர் நடித்துள்ள அக்னி சிறகுகள் படமும் ரிலீசாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X