ஸ்டைலான லுக்கில் ..பிள்ளையாரை அலேக்காக தூக்கும் அருண் விஜய்.. வைரலாகும் புகைப்படம்!

சென்னை : தமிழ் சினிமாவில் சமீப காலமாக தொடர் வெற்றித் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருபவர் நடிகர் அருண் விஜய்.

என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு பலரும் நினைத்துப் பார்க்காத அளவிற்கு இவரது வளர்ச்சி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகும் நிலையில் இவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களும் முன்னணி நடிகர்களுக்கு இணையான வசூல் சாதனை புரிந்து வருகிறது.

இந்நிலையில் புது படத்திற்காக தனது உடலை செமயாக தயார் படுத்தி வைத்திருக்கும் அருண் விஜய் இப்பொழுது பாகுபலியைப் போல பிள்ளையாரை அலேக்காக தூக்கிச் செல்லும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இன்று வெற்றி நாயகனாக

இன்று வெற்றி நாயகனாக

பிரபல மூத்த நடிகரான விஜயகுமாரின் மகன் அருண் விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க பல ஆண்டுகளாக போராடி பல தோல்விகளை சந்தித்து இன்று வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

முன்னணி நடிகர்களுக்கு இணையாக

முன்னணி நடிகர்களுக்கு இணையாக

விடா முயற்சி, கடின உழைப்பு என பலரும் அசந்து போகும் வகையில் இன்று சினிமாவில் அனைவரும் விரும்பும் சிறந்த நடிகராக உயர்ந்து நிற்கும் அருண்விஜய் தொடர்ந்து வித்யாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று வருவதோடு முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூல் சாதனையும் புரிந்து வருகிறார்.

திருப்பு முனையாக

திருப்பு முனையாக

கௌதம் வாசுதேவ் மேனன், அஜித் குமார் கூட்டணியில் உருவான "என்னை அறிந்தால் " திரைப்படத்தில் முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டும் கட்டுடல் மேனியுடன் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இறங்கி அதிரடி காட்டிய அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் மாபெரும் திருப்பு முனையாக அமைந்த நிலையில் அதை தொடர்ந்து இவர் நடித்த குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம் என தொடர் வெற்றிப் படங்களில் நடித்து இப்பொழுது தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

அசத்தலான கட்டுடல்

அசத்தலான கட்டுடல்

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பில் அசத்தி ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சி படுத்தி வரும் அருண் விஜய் சில நாட்களுக்கு முன்பு முறுக்கு மீசையுடன் அசத்தலான கட்டுடல் என அனைவரும் மிரளும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில் இப்பொழுது மேலும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாகுபலியை போல அலேக்காக

பாகுபலியை போல அலேக்காக

கடவுளின் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ள அருண் விஜய் ஒரு தீவிர விநாயகர் பக்தர் ஆவார். இந்நிலையில் தனது வீட்டிற்கு புதிதாக விநாயகர் சிலையை வாங்கி வந்த அருண் விஜய் அதை பாகுபலியை போல அலேக்காக தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டிருந்த நிலையில் அந்தப் புகைப்படம் இப்பொழுது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

அதிக பட்ஜெட்டில்

அதிக பட்ஜெட்டில்

மேலும் இவரது சமீபத்திய வோல்வரின் லுக் மற்றும் முறுக்கு மீசை லுக் மிகப் பிரபலமடைந்த நிலையில் இவர் முதல்முறையாக இயக்குனர் ஹரியுடன் இணையும் திரைப்படத்தை ரேடன் மீடியா தயாரிக்க அது அருண் விஜய் இதுவரை நடித்த திரைப்படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X