சூர்யாவோட ரோலக்ஸ் கேரக்டரை முழுமையாக பார்க்க ஆர்வமா இருக்கு.. அருண் விஜய் வெயிட்டிங்!
சென்னை : நடிகர் அருண் விஜய் நடிப்பில் தற்போது தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் தொடர் ரிலீசாகியுள்ளது.
அருண் விஜய்யுடன் அழகம் பெருமாள், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்த தொடரை அறிவழகன் இயக்கியுள்ளார்.
தற்போது சோனி லைவ் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்த தொடர் சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது.

நடிகர் அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருபவர். சமீபத்தில் இவரது நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியான யானை படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தது. ஆக்ஷன் டிராமாவாக வெளியான இந்தப் படம் கிராமத்து கதைக்களத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாகியிருந்தார் பிரியா பவானி சங்கர்.

அடுத்தடுத்த படங்கள்
முன்னதாக தன்னுடைய மகனுடன் இணைந்து ஓ மை டாக் என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. இந்தப் படத்தில் அருண் விஜய்யின் அப்பா விஜயகுமாரும் நடித்திருந்தார். மூன்று தலைமுறை நடிகர்களை இந்தப் படம் காட்சிப் படுத்தியிருந்தது.

தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடர்
இந்நிலையில் தற்போது அறிவழகன் இயக்கத்தில் தமிழ் ராக்கர்ஸ் என்ற த்ரில் வெப் சீரிஸில் நடித்துள்ளார் அருண் விஜய். இந்தப் படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த தொடரின்மூலம் மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளது ஏவிஎம் நிறுவனம்.

எட்டு எபிசோட்கள்
எட்டு எபிசோட்களுடன் களமிறங்கியுள்ளது தமிழ் ராக்கர்ஸ் தொடர். பிரபல நடிகரின் 300 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தை ரிலீசுக்கு முந்தைய தினம் வெளியிடுவதாக சவால் விடுகிறார்கள் தமிழ் ராக்கர்ஸ் என்ற சட்டவிரோத இணையதளத்தினர். அவர்களை பிடிக்க களமிறங்கும் ருத்ரா (அருண் விஜய்) அவர்களை பிடித்தாரா என்பதே இந்தத் தொடரின் கதைக்களமாக அமைந்துள்ளது.

ரோலக்ஸ் கேரக்டர் குறித்து அருண் விஜய்
இந்த வெப் தொடரின் பல இடங்களில் லேக் இருந்தாலும் ரசிகர்களை கவரும்வகையிலேயே தொடர் காணப்படுகிறது. இதனிடையே இந்த தொடருக்கான பிரமோஷனில் ஈடுபட்ட அருண் விஜய், விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் தன்னை வெகுவாக கவர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

முழுமையாக பார்க்க ஆசை
அடுத்த பாகத்தில் சூர்யாவின் முழுமையான ரோலக்ஸ் கேரக்டரை பார்க்க தான் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு ஸ்டார்ட்டாகவே விக்ரம் படத்தில் இந்த கேரக்டர் அமைந்துள்ளதை சுட்டிக் காட்டிய அவர், இந்தக் கேரக்டரின் முழு வடிவத்தை பார்க்க தான் மிகவும் விருப்பத்துடன் உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











