பொண்ணு பார்க்க போனபோது.. மனைவியிடம் கேட்கக்கூடாத கேள்வி கேட்டேன்.. அருண் விஜய் ஓபன் டாக்!

சென்னை: பெண் பார்க்க போகும் போது, எந்த பொண்ணுக்கிட்டையும் கேட்கக் கூடாத கேள்வியை கேட்டேன் என்று அருண் விஜய் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழில் மூத்த நடிகர் விஜயகுமாரின் மூத்த மனைவி முத்து கண்ணு அவர்களின் மகன் தான் அருண் விஜய்.

முறை மாப்பிள்ளை படத்தின்மூலம் அவர் கடந்த 1994ல் தமிழில் அறிமுகமானார். தற்போது தொடர்ந்து பல்வேறு சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.

Actor Arun Vijays first question to his wife Aarthi

அருண் விஜய்: முதல் படத்தை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தாலும் அடுத்தடுத்த படங்கள் சரியாக அமையாததால், இவரால் சினிமாவில் தனக்கான இடத்தைபிடிக்க முடியாமல் தவித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

முக்கியமான படம்: இந்த படத்தை தொடர்ந்து கதைகளை கவனமாக தேர்வு செய்து அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். தற்போது அருண் விஜய் இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இருந்து சூர்யா விலகியதை அடுத்து, அருண் விஜய் இப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படம் அருண் விஜய்யின் திரைவாழ்க்கையில் முக்கியமான படமான இருக்கும்.

கேட்கக்கூடாத கேள்வி: இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அருண் விஜய், தன்னுடைய மனைவியை பெண் பார்க்க சென்ற நடந்த சுவாரசியமான விஷயத்தை பேட்டியில் கூறியுள்ளார். அதில், ஹோட்டல் ஒன்றில் பெண் பார்க்க சென்றோம். அப்போது பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என கூறினேன். அவங்க குள்ளமாக இருந்ததால், ஹீல்ஸ் போட்டிருந்தாங்க. இதனால், நான் அவரிடம் எவ்வளவு பெரிய ஹீல் போட்டு இருக்கீங்க என்று கேட்டேன்.

ரொம்ப பிடித்து இருந்தது: ஆனால் ஆர்த்தி மிகவும் கேஷுவலாக… காலை நீட்டி இதோ நீங்களே பார்த்துக்கோங்க என்றார். அப்போது தான் தெரிந்தது இதையெல்லாம் பெண்களிடம் கேட்கக்கூடாது என்று. அவர் சொன்ன பதில் எனக்கு பிடித்து விட்டது. பின்னர் இரு வீட்டு பெற்றோரும், பேசி எங்களுடைய திருமணம் நடைபெற்றது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X