ரெட்ட தல சூட்டிங் ஓவர்.. பிரியாணி விருந்து வைத்த அருண் விஜய்.. சித்தி இத்னானி பண்ண வேலையை பாருங்க!
சென்னை: நடிகர் அருண் விஜய் மிகப்பெரிய போராட்டங்களுக்கு பிறகு கோலிவுட்டின் சிறப்பான நடிகராக தன்னை நிலை நிறுத்தியுள்ளார். துவக்கத்தில் சாக்லேட் பாய் கேரக்டர்களில் நடித்து வந்து அருண்விஜய்க்கு அந்த படங்கள் சரியாக கைகொடுக்காத நிலையில் அஜித்துடன் இவர் நடித்த என்னை அறிந்தால் படமே இவருக்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்தது.
என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த போதிலும் அஜித்திற்கு இணையான கேரக்டரை பெற்றிருந்தார் அருண் விஜய். இந்நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து தடையற தாக்க உள்ளிட்ட படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில், தற்போது பாலாவின் வணங்கான் படத்தில் நடித்த முடித்துள்ளார். இதனிடையே அருண் விஜய் நடிப்பில் ரெட்ட தல படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது.

நடிகர் அருண் விஜய்: நடிகர் அருண் விஜய். நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவில் என்ட்ரி கொடுத்த போதிலும், அவருக்கு தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக் கொள்வது அவ்வளவு எளிதாக அமையவில்லை. பல வருடங்கள் போராடி தான் தற்போது ஒரு நல்ல நடிகர் என்ற இமேஜை அவர் பெற்றுள்ளார். அவருக்கு மிகச் சிறப்பாக அமைந்த படங்களில் என்னை அறிந்தால் படமும் ஒன்றாக இருந்தது. தொடர்ந்து தடையறத் தாக்க, தடம் போன்ற வெற்றி படங்களையும் கொடுத்துள்ள நடிகர் அருண் விஜய், தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ரெட்ட தல படம்: இதனிடையே அடுத்ததாக தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகும் அவரது அடுத்த படத்திலும் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் ரெட்ட தல படத்தில் நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக சமீபத்தில் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தை பிடிஜி யூனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ள சூழலில் அருண் விஜய்யுடன் தன்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
பிரியாணி ட்ரீட் கொடுத்த அருண் விஜய்: பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இதனிடையே, படத்தின் சூட்டிங் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் தற்போது நடிகர் அருண் விஜய் படக் குழுவினருக்கு பிரியாணி விருந்து அளித்து அசத்தியுள்ளார். இந்த பிரியாணி விருந்தில் அவர் அனைவருக்கும் பிரியாணியை உற்சாகத்துடன் பரிமாறியதை பார்க்க முடிந்தது. இதனிடையே அவருக்கே பிரியாணி போட்டுள்ளார் படத்தின் நாயகி. அவர் வேண்டாம் என்று கூறிய நிலையில் சித்தி இத்னானி, சிறிய அளவில் அவருக்கு பிரியாணி போட்டு கலாய்த்ததை தற்போது வெளியாகி உள்ள வீடியோ மூலம் பார்க்க முடிகிறது.
கொண்டாடும் நடிகர்கள்: தற்போது எல்லாம் படம் ஷூட்டிங் நிறைவடைந்தவுடன் அதை படக்குழுவினருடன் கொண்டாடுவதை நடிகர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நடிகர் சிம்பு, தான் நடித்த படத்தின் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து பரிமாறியதை பார்க்க முடிந்தது. இதுபோல அடுத்தடுத்த நடிகர்கள், நடிகைகளும் பிரியாணி ட்ரீட் கொடுத்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் பிரியாணி விருந்தை தன்னுடைய படக்குழுவினருக்கு பரிமாறினார். இதன் வீடியோக்களை சமூக வலைதளங்கள் மூலமாக காண முடிந்தது. இந்நிலையில் தற்போது அந்த லிஸ்ட்டில் நடிகர் அருண் விஜய்யும் இணைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications