Dhanush: ஒவ்வொரு கொலைக்கும் ஒரு அழுத்தமான காரணம்.. கேப்டன் மில்லர் சுவாரஸ்யம்!
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது.
பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படம் டிசம்பர் மாத வெளியீடாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 30ம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. விரைவில் படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேப்டன் மில்லர் படம் குறித்து சக நடிகர் பாராட்டு: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சிவராஜ்குமார், சுமேஷ் மூர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் அந்த காலகட்டத்து கெட்டப்பில் தனுஷை பார்க்க முடிந்தது. இந்தப் படத்திற்காக ஏறக்குறைய 10 மாதங்கள் தனுஷ் கால்ஷீட் கொடுத்துள்ளார். எப்போதும் அவர் ஒரு படத்திற்கு 3 மாதங்களுக்கு மேல் கால்ஷீட் கொடுப்பது வழக்கத்தில் இல்லாதது.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்காக மிகவும் மெனக்கெட்டு அதிகமான முயற்சிகளை செய்துள்ளார் தனுஷ். படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் நடிகர் தனுஷ் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்ட நிலையில், சுற்றிலும் பிரிட்டீஷ் வீரர்கள் இறந்து கிடப்பது போல இருந்தது. இந்நிலையில், இந்த துப்பாக்கி 2ம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி என்று படத்தின் கலை இயக்குநர் அப்டேட் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த போஸ்டரில் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில், படத்தில் ஒவ்வொரு கொலைக்கும் ஒரு அழுத்தமான காரணம் பின்புலமாக இருக்கும் என்று படத்தில் நடித்துள்ள நடிகர் அருணோதயன் தெரிவித்துள்ளார். இந்தப்படம் மரியாதை தான் உண்மையான சுதந்திரம் என்ற வாசகத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கேஜிஎப் படம் எப்படி ரசிகர்களின் பல்சை எகிற வைத்ததோ அதே போல இந்தப் படமும் சிறப்பாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் தனுஷ், அதிகமான பிரிட்டீஷ் வீரர்களை கொன்றதாக காட்டப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அருணோதயன், இந்த ஒவ்வொரு உயிரிழப்புக்கும் படத்தில் ஒரு கனமான காரணம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். முன்னதாக அவர் தனது பேட்டியில் படத்தின் பிஜிஎம் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
கேப்டன் மில்லர் படத்தில் தனது போர்ஷனை முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் அடுத்ததாக டி50 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில், மிரட்டலான போஸ்டரும் வெளியாகியுள்ளது. சென்னையில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில், பிரம்மாண்டமான வடசென்னை செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே கட்டமாக படத்தின் சூட்டிங்கை நடத்திமுடிக்கவும் தனுஷ் திட்டமிட்டுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











