நடிகர் அருண் விஜய் மீது நுங்கம்பாக்கம் போலீஸ் கொலை முயற்சி வழக்கு

By Staff

Arun Vijay
சென்னை நடிகை வனிதா கொடுத்த புகாரின் பேரில் அவரது சகோதரரான நடிகர் அருண் விஜய் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய தேடி வருகின்றனர்.

நடிகர் விஜயக்குமார் குடும்பத்துக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் கடந்த 2 வாரங்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. வீட்டுக்குள் நடந்த இந்த சண்டை இப்போது தெருவுக்கு வந்துள்ளது.

விஜயக்குமார் மீது சரமாரியாக புகார்களை கூறிய வனிதா, தந்தை விஜயக்குமார், தாயார் மஞ்சுளா, விஜயக்குமாரின் முதல் மனைவியின் மகன் அருண் விஜய் ஆகியோர் மீது மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அவர்களும் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் அதில் திருப்தி இல்லை என்று கூறிய வனிதா, டிஜிபியை நேரில் சந்தித்துப் புகார் கொடுத்தார்.

இந்த நிலையில் தற்போது சென்னை மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புதிய கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார். அருண் விஜய் ஆட்களை அனுப்பி தன்னை மிரட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதில் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து ஆட்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது, கொலை செய்ய முயற்சித்தது உள்ளிட்ட பிரிவுகளில் அருண் விஜய் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது அருண் விஜய் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் ஹைதராபாத்தில் இருப்பதாக முதலில் வனிதா கூறியிருந்தார். ஆனால் அவர் தற்போது இந்தியாவிலேயே இல்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கு அவர் ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

மதுரவாயல் காவல் நிலையத்தில் வனிதா புகார் கொடுத்தவுடனேயே அவர் அமெரிக்காவுக்குத் தப்பி விட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம், விஜயக்குமாரும், அவரது 2வது மனைவியான நடிகை மஞ்சுளாவும் ஹைதராபாத்தில் பதுங்கியிருப்பதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X