திரையரங்குக்கு திடீர் விசிட் அடித்த அருண்விஜய்.. ‘யானை‘யை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி !
சென்னை : நடிகர் அருண்விஜய், யோகிபாபு ஆகியோர் யானை படம் ஓடும் திரையரங்கிற்கு திடீர் விசிட் அடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
Recommended Video
இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியானத் திரைப்படம் யானை. இப்படத்தில், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், சஞ்சீவ், போஸ் வெங்கட், ராமச்சந்திர ராஜூ,யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கிராமத்து பின்னணி கொண்ட இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

யானை
ஹரி இயக்கத்தில் உருவான யானை திரைப்படம் பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவித்தும் தியேட்டர்கள் கிடைக்காததால் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து,ஜூலை 1ந் தேதி இத்திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. வழக்கமான ஹரி படங்கள் போல் இருந்தாலும் இப்படத்தின் மேக்கிங்கில் சற்று வித்தியாசம் தெரிவதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

அட்டகாசமான நடிப்பு
குடும்ப செண்டிமெண்ட், காதல், ஆக்ஷன் என அனைத்தும் சமமாக உள்ளது. இருகுடும்பத்திற்குள் நடக்கும் குடும்ப பிரச்சனையில் அண்ணன் மகள் கடத்தப்பட, அவரை எப்படி காப்பாற்றினாரா ? எப்படி காப்பாற்றினார் என்பதுதான் படத்தின் கதை? நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்ப செண்டிமெண்ட் கதையில் அருண்விஜய் நடித்துள்ளார். இவரது நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ராதிகா சரத்குமார் அருண்விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளார்.

சர்ப்ரைஸ் விசிட்
இந்நிலையில், யானை திரைப்படம் ஓடும் வெற்றி திரையரங்குக்கு அருண்விஜய், யோகிபாபு, இமான் அண்ணாச்சி திடீரென வந்த ரசிகர்களை மகிழ்வித்தன. இப்போது பேசிய, அருண்விஜய், குடும்பம் குடும்பமா, கையில் குந்தையை வைத்துக்கொண்டு இந்த படத்தை பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவருக்கும் நன்றி. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலானோர் குடும்பமாக இந்த படத்தை பார்த்து வருகிறார்.

வெற்றி படமாக்கி மக்களுக்கு நன்றி
ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் சண்டை காட்சிகளில் மிகவும் கஷ்டப்பட்டு நடிச்சேன். அந்த காட்சியை நீங்கள் ரசித்து பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஒரு படத்தின் வெற்றி மக்கள் கையில் தான் இருக்கிறது.மக்களை நம்பித்தான் நாங்க படம் எடுக்கிறோம். இந்த படத்தை வெற்றிப்படமாக்கிய உங்களுக்கு யானை படக்குழுவின் சார்பாக மிகுந்த நன்றி என்றார்.

கோடிக்கணக்கான வசூல்
யானை திரைப்படம் வெளியாகி 3 நாட்கள் முடிந்துள்ள நிலையில் ரூ. 9 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அருண் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து இருப்பதால் இன்னும் வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அருண்விஜய் நடித்துள்ள பார்டர், அக்னி சிறகுகள் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











