சயீரா நரசிம்ம ரெட்டி... சிரஞ்சீவிக்கு தமிழில் டப்பிங் பேசும் அரவிந்த் சாமி

சென்னை: நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் நான்கு மொழிகளில் மிகப் பிரமாண்டமாக தயாராகும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் புதிதாக அரவிந்த் சாமியும் இணைந்துள்ளார். இவர் தமிழ் மொழியில் நடிகர் சிரஞ்சீவிக்கு டப்பிங் குரல் கொடுக்க ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கி நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் திரைப்படம் தான் சயீரா நரசிம்ம ரெட்டி. இந்த திரைப்படத்தை நடிகர் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண் தயாரித்துள்ளார்.

Actor Arvind Swami Joins in Saira Narasimha Reddy Film

இந்த திரைப்படம் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவை சுதந்திரம் அடையச் செய்வதற்காக போராடிய ஒரு வீரனின் கதை. ஆங்கிலர்களை எதிர்த்து போராடிய வீரர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் அவர்களில் பல பேர்களின் சரித்திரம் வெளியே தெரியாத வகையில்தான் இருக்கிறது.

ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் சயீரா நரசிம்ம ரெட்டி. இந்த திரைப்படத்தில் சயீரா நரசிம்ம ரெட்டியாக நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ளார். நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.

Actor Arvind Swami Joins in Saira Narasimha Reddy Film

தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என ஒரே சமயத்தில் நான்கு மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு தென்னிந்திய மொழிகளில் உள்ள பிரபலமான நடிகர்கள் நடிகைகள் நடித்துள்ளனர். இந்நிலையில் தமிழ் மொழியில் நடிகர் சிரஞ்சீவிக்கு டப்பிங் குரல் கொடுக்க நடிகர் அரவிந்த் சாமி ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் அரவிந்த் சாமி டப்பிங் பேசுவதில் திறமையானவர். இயக்குனர் மணிரத்னம் இயக்கிய உயிரே திரைப்படத்தில் நடிகர் ஷாருக் கானுக்கு தமிழ் டப்பிங் கொடுத்தவர். மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான ஹாலிவுட் திரைப்படமான தி லைன் கிங் திரைப்படத்திற்கும் தமிழ் டப்பிங் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கும் டப்பிங் கொடுத்துள்ளார்.

சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. தென்னிந்திய மொழிகளில் உள்ள பிரபலமான நடிகர் நடிகைகளின் நடிப்பை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்துக்கொண்டே இருக்கிறோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X