சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ!
சென்னை: நடிகர் அரவிந்த் சுவாமி தனது மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தளபதி படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு தம்பியாகவும் இளம் கலெக்டராகவும் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அரவிந்த் சுவாமி.
அடுத்த படமான ரோஜா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் சக்கை போடு போட்டு விருதுகளை வாங்கி குவித்தது.

90களில் கனவு நாயகன்
தொடர்ந்து தமிழ் மலையாளம், இந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் பிஸியானார். 90 களில் இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்தார் அரவிந்த் சுவாமி. அலைபாயுதே படத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்தார் அரவிந்த் சுவாமி.

ஹேண்ட்சம் வில்லன்
அதன் பிறகு பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் 2013ல் வெளியான கடல் படத்தில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் மணிரத்னம். இதனை தொடர்ந்து 2015ல் வெளியான தனி ஒருவன் படத்தில், சித்தார்த் அபிமன்யு என்ற கேரக்டரில் ஸ்மார்ட் அன்ட் ஹேண்ட்சம் வில்லனாக ரீஎன்ட்ரி கொடுத்தார்.

ரிலீஸுக்கு தயார்
இதில் அரவிந்த் சுவாமியின் நடிப்பு பலராலும் ரசிக்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் அரவிந்த் சுவாமி. தற்போது சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசூரன் உள்ளிட்ட படங்கள் அவரது நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
Recommended Video

மகள் அதிராவுடன்
தலைவி படத்தில் எம்ஜிஆராக நடித்து வருகிறார் அரவிந்த் சுவாமி, அண்மையில் அவரது லுக் வெளியாகி பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் அரவிந்த் சுவாமி தனது மகள் அதிராவுடன் இருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது.

சைக்கிள் திருடர்கள்..
இதில் மகளை முன்னால் உட்கார வைத்து சைக்கிள் ஓட்டுகிறார் அரவிந்த் சாமி. இந்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள அரவிந்த் சுவாமி, அதற்கு சைக்கிள் திருடர்கள் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போட்டோ 34ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் லைக் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











