இயக்குநராக ஆசைப்படும் அரவிந்த் சாமி.. வில்லனாகவும் நடிக்கணுமாம்!

சென்னை : தளபதி, ரோஜா என கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமியின் ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது.

அரவிந்த் சாமி போன்ற மாப்பிள்ளைக்காக ஏங்கிய பல ரசிகர்கள் அந்த காலகட்டத்தில் காணப்பட்டனர்.

தொடர்ந்து பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போனார் அரவிந்த்சாமி.

நடிகர் அரவிந்த்சாமி

நடிகர் அரவிந்த்சாமி

தளபதி படத்தில் இளம் கலெக்டராக வந்து மிரட்டியிருப்பார் அரவிந்த்சாமி. இதேபோல இவருடைய ரோஜா படமும் இவருக்கு சிறப்பான அறிமுகத்தை கோலிவுட்டில் கொடுத்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை குறிப்பாக ரசிகைகளை அதிகமாக பெற்றார் அரவிந்த் சாமி.

இளம் ரசிகைகள்

இளம் ரசிகைகள்

அரவிந்த்சாமி போன்ற கணவர் தனக்கு வாய்க்க வேண்டும் என்று அப்போதைய ரசிகைகள் தவமிருந்தது ஒரு காலகட்டம். அந்த அளவிற்கு சிறப்பான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அதை ரசிகர்கள் ஏற்கும்வகையில் சிறப்பாக்கினார் அரவிந்த் சாமி. தொடர்ந்து இவரது படங்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் முன்னணி இயக்குநர்களின் டைரக்ஷனில் வெளியாகி வரவேற்பை பெற்றன.

பாக்கெட் மணிக்காக நடிப்பு

பாக்கெட் மணிக்காக நடிப்பு

இவருடைய அப்பா மிகப்பெரிய பிசினஸ்மேனாக இருந்தபோதிலும் குறைவான பேக்கட் மணியே கொடுப்பாராம். இதையடுத்து தன்னுடைய கல்லூரி காலகட்டத்தில் மாடலிங் செய்துள்ளார் அரவிந்த்சாமி. தொடர்ந்து அதன்மூலம் கிடைத்த மணிரத்னத்தின் கான்டாக்டில் தளபதி தொடர்ந்து ரோஜா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பிசினசில் கவனம்

பிசினசில் கவனம்

தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்த அரவிந்த்சாமி, அலைபாயுதே படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். இதையடுத்து நடிப்பிலிருந்து விலகிக் கொண்டு, தன்னுடைய அப்பாவின் பிசினசை கவனக்கத் துவங்கிவிட்டார். அதிலும் தன்னை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தி, பல புதிய பிசினஸ்களையும் துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

அரவிந்த்சாமியை முடக்கிய விபத்து

அரவிந்த்சாமியை முடக்கிய விபத்து

இந்நிலையில், இவருக்கு ஏற்பட்ட விபத்து ஒன்றின்மூலம் 4 ஆண்டுகள் முடங்கியிருந்த அரவிந்த் சாமி தொடர்ந்து தனியொருவன் படத்தில் மீண்டும் தனது திரைப்பயணத்தை துவக்கி தற்போது சிறப்பாக நடைபோட்டு வருகிறார். இவருக்கு இதுபோன்ற வில்லத்தனமான மற்றும் மாஸ் கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் மிகவும் பிடித்தமானதாம்.

இயக்குநராகும் கனவு

இயக்குநராகும் கனவு

தொடர்ந்து இத்தகைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் பிசியாக நடித்துவரும் அரவிந்த் சாமிக்கு இயக்குநராகும் கனவும் உள்ளதாம். விரைவில் இதற்கான பணிகளில் ஈடுபட உள்ளதாக சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

சினிமாவில் பல்துறை வித்தகராக காணப்படும் ஒருசில ஹீரோக்களில் அரவிந்த்சாமியும் ஒருவராக உள்ள நிலையில், அவரை இயக்குநராக பார்க்க அவரது ரசிகர்களும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X