ஆர்யாவை ஆட்டிப் படைக்கும் அசுரப் பேய்... அரண்மனை 3!
சென்னை : நடிகர் ஆர்யா பா ரஞ்சித் கூட்டணியில் வெளியான சார்பட்டா பரம்பரை மாபெரும் வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.
சார்பட்டா பரம்பரைக்கு பிறகு ஆர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை3 தற்போது வெளியாக உள்ளது.
முதல் முறையாக ஆர்யா ஹாரர் திரைப்படத்தில் நடித்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்க இதில் ஆர்யாவை அசுரப் பேய் ஆட்டிப்படைக்கிறது.

முரட்டுத்தனமான குத்துச்சண்டை வீரராக
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஆர்யா இதுவரை காதல் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்க சமீபத்தில் முரட்டுத்தனமான குத்துச்சண்டை வீரராக சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து இப்போது ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ளார். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது

ஆயுத பூஜையை முன்னிட்டு
சார்பட்டா பரம்பரை வெற்றிக்குப் பிறகு ஆர்யாவின் மீது ரசிகர்களுக்கு முழு கவனமும் திரும்பியிருக்க அடுத்ததாக ஆர்யாவின் நடிப்பில் இப்பொழுது அரண்மனை 3 ரிலீஸாக உள்ளது. அரண்மனை 3 படத்தின் டிரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து திரைப்படம் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு உலகமெங்கும் ரிலீசாகிறது.
இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா மற்றும் சாக்ஷி அகர்வால் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

ஹாரர் படமாக
சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 1 மற்றும் 2 மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்போது மூன்றாவது பாகமும் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சுந்தர் சியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதயத் துடிப்பை பதம் பார்க்கும் ஹாரர் படமாக உருவாகியுள்ள அரண்மனை 3ல் காமெடிக்காக யோகி பாபு, நளினி, மனோபாலா,விவேக்,மைனா நந்தினி ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.

அசுரப் பேய் ஆட்டிப்படைக்கிறது
இதற்கு முந்தைய பாகங்களான அரண்மனை 1 மற்றும் 2ல் கதாநாயகிகளுக்கு மட்டுமே பேய் பிடிப்பது போல கதைக்களம் உருவாக்கப்பட்டு இருந்தது ஆனால் இந்த முறை அரண்மனை 3ல் ஹீரோ ஆர்யாவை அசுரப் பேய் ஆட்டிப்படைக்கிறது. தரமான ஹாரர் படமாக உருவாகியுள்ள அரண்மனை 3 ரசிகர்களை ஆயுத பூஜை தினத்தில் திரையில் மிரட்ட ரெடியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











