ஆர்யாவுக்கு எல்லாமே ஹாப்பி நியூஸ் தான்.. அழகான பெண் குழந்தைக்கு அப்பா ஆகிட்டாரு!
சென்னை: நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
இந்த சந்தோஷமான செய்தியை நடிகர் விஷால் தனது ட்விட்டர் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.
சார்பட்டா பரம்பரை படத்திற்காக அனைவரிடமும் பாராட்டுக்களை அள்ளி வரும் நடிகர் ஆர்யாவுக்கு அடுத்த ஹாப்பி நியூஸ் ஆக பெண் குழந்தை பிறந்துள்ளது.

அற்புதமான நடிகர்
அறிந்தும் அறியாமலும், உள்ளம் கேட்குமே என ஆர்யாவின் ஆரம்பமே அசத்தலாக ஆரம்பித்தது. இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள், அவன் இவன் படத்தில் எல்லாம் மிரட்டி இருப்பார். பீரியட் பிலிமான மதராசபட்டினம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஆர்யா டெடி படத்தை தொடர்ந்து சார்பட்டா பரம்பரை படத்திலும் மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ளார்.

காதல் திருமணம்
கஜினிகாந்த் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை சாயிஷா உடன் ஏற்பட்ட காதலை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு ஆர்யா மற்றும் சாயிஷாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இருவரும் இணைந்து சூர்யாவின் காப்பான் மற்றும் டெடி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளனர்.

பெண் குழந்தை
இந்நிலையில், ஆர்யா மற்றும் சாயிஷாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. நடிகை சாயிஷா கர்ப்பமாக இருப்பதே தெரியாத அளவுக்கு அவர் டெடி படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஆர்யா - சாயிஷாவுக்கு குழந்தை பிறந்துள்ள சந்தோஷமான செய்தியை நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

மாமா ஆகிட்டேன்
நண்பர் ஆர்யாவுக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தை வெளிப்படுத்திய நடிகர் விஷால் நான் மாமா ஆகிட்டேன் என்று போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது. அவன் இவன் படத்தை தொடர்ந்து இருவரும் இணைந்து எனிமி படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா ஹாப்பி
டெடி படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள சார்பட்ட பரம்பரை படத்திற்காக உயிரையும் உடலையும் கொடுத்து உழைத்துள்ள ஆர்யாவுக்கு அடுத்த ஹாப்பி நியூஸாக அழகிய மகள் பிறந்திருக்கும் செய்தி கிடைத்துள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் ஆர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











