பூஜையுடன் துவங்கியது சியான் 61 படம்.. ஆர்யா எப்படி வந்தாரு தெரியுமா.. கெத்துதான்!

சென்னை : நடிகர் விக்ரம் -பா ரஞ்சித் இணையும் புதிய படத்தின் சூட்டிங் இன்றைய தினம் பூஜையுடன் துவங்கியுள்ளது.

Recommended Video

Chiyaan 61 Movie Pooja | Pa Ranjith | Vikram | Studio Green & Neelam Productions | *Kollywood

இந்தப் படத்தின் பூஜை மிகவும் பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விக்ரம் இந்த நிகழ்ச்சியில் மிகவும் உற்சாகமாக காணப்பட்டார்.

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு தற்காலிகமாக மைதானம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

மகான் படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி வருகிறது. இதில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள கோப்ரா மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. தமிழகத்தில் இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்யவுள்ளது.

கோப்ரா இசை வெளியீடு

கோப்ரா இசை வெளியீடு

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. முன்னதாக பொன்னியின் செல்வன் டீசர் ரிலீஸ் நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் விக்ரம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

இசை வெளியீட்டில் விக்ரம் பங்கேற்பு

இசை வெளியீட்டில் விக்ரம் பங்கேற்பு

ஆனால் கோப்ரா இசை வெளியீட்டில் அவர் கலந்து கொண்டார். அவரது உடல்நலன் குறித்த கவலையில் இருந்த ரசிகர்களுக்கு அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது உற்சாகத்தை அளித்தது. இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

சியான் 61 படப்பூஜை

சியான் 61 படப்பூஜை

இந்நிலையில் சில தினங்களிலேயே தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் விக்ரம். சியான் 61 படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் பிரம்மாண்டமான அளவில் போடப்பட்டது. ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கவுள்ள இந்தப் படம் 3டியில் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீரியட் படம்

பீரியட் படம்

பீரியட் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு தற்காலிகமாக மைதானம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதிக பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியிட தயாரிப்புத் தரப்பு திட்டமிட்டுள்ளது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

சைக்கிளில் வந்த ஆர்யா

சைக்கிளில் வந்த ஆர்யா

இந்நிலையில் இந்த பூஜைக்கு நடிகர் ஆர்யா வித்தியாசமான வகையில் சைக்கிளில் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். நடிகர் சிவக்குமாரும் விழாவில் கலந்துக் கொண்டார். சைக்கிளில் வருவதை நடிகர்கள் தொடர்ந்து ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர். நடிகர் விஜய்யும் தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்து ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X