For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மஹாமுனி: ஒருமுகம் சாந்தம்... இன்னொரு முகம் டெரர் - ஆர்யா அசத்தல்

|

சென்னை: நான் இந்த மாதிரியான கேரக்டரில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. கனவிலும் நினைக்காதது நிஜத்தில் நடந்துள்ளது என்று மஹிமா நம்பியார் மஹாமுனி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார்.

மஹாமுனி படத்தில் நடிகர் ஆர்யா, மஹா, முனி என இரு வேடங்களில் நடித்துள்ளார். ஒரு வேடத்தில் சாந்த சொரூபியாகவும் இன்னொரு வேடத்தில் டெரர் முகம் காட்டியும் நடித்துள்ள படம். ஆரியாவுக்கு ஜோடியாக இந்துஜா மற்றும் மஹிமா நம்பியார் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

Actor Arya dual rolls in Mahamuni Movie

மஹாமுனி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், நடிகை இந்துஜா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் ஜி.எம்.சுந்தர், எடிட்டர் சாபு ஜோசப், நடிகை தீபா உள்ளிட்ட முக்கிய சினிமா பிரமுகர்கள் கலந்துகொண்டு பேசினார்கள்.

மஹிமா நம்பியார் பேசும்போது, என்னுடைய சினிமா கேரியரில் இந்த மாதிரி ஒரு கேரக்டர் கிடைக்கும் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. தி ட்ரீம் கம் ட்ரூ(The Dream Come True). அதாவது கனவில் நினைப்பது தான் நிஜத்தில் நடக்கும் என்ற சொல்வார்கள். ஆனால் நான் கனவிலும் நினைத்துக்கூட பார்க்காத ஒரு கேரக்டரை எனக்கு இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார்கள் என்று பேசினார்.

இந்தியன் 2 அப்டேட்: கமல்ஹாசனுடன் மோதும் பாபி சிம்ஹா

மேலும், நடிகர் ஆர்யாவைப் பற்றி நான் நினைத்திருந்தது வேறு. அவர் மிகவும் ஜோவியலான ஆளாக இருப்பார் என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனால் இந்தப் படத்தில் நடிக்கும்போது, நான் படப்பிடிப்புக்கு போனால், அவர் எனக்கு முன்பே அங்கே போய் எல்லா டயலாக்கையும் மனப்பாடம் பண்ணி வைத்துக்கொண்டு தயாராக இருப்பார். இந்த பங்க்சுவாலிட்டியை நான் ஆர்யாவிடமிருந்து கற்றுக்கொண்ட பாடம் என்று மனம் திறந்து பேசினார்.

மற்றொரு கதாநாயகியான இந்துஜா பேசும்போது, இந்தப்படம் என்னுடைய லைஃப் டைம் எக்ஸ்பீரியன்ஸ் படம். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு அனைவருக்கும் நன்றி. நடிகர் ஆர்யா ஒரு சாக்லேட் பாய் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் இந்தப்படத்தில் அவ்வளவு டெடிகேட்டடாக ஒர்க் பண்ணியிருக்கார். இது நான் கொஞ்சம் ஓவரா சொல்றது மாதிரி உங்களுக்கு தெரியும். ஆனால் நீங்க தியேட்டருக்கு போய் படம் பாக்கும்போது, நான் சொன்னது உண்மைன்னு புரியும் என்று ஆர்யாவை புகழ்ந்து தள்ளிவிட்டார்.

சின்னத்திரை நடிகை தீபா பேசும்போது, இந்தப் படத்தோட ட்ரெய்லர்ல மனித மிருகம்னு சொல்லும்போது, என்னோட முகத்தை காட்டுவாங்க. ஆனா, அப்படி எல்லாம் பண்ணாதீங்க. உண்மையிலேயே நான் ரொம்ப சாந்தமான பொண்ணுங்க என்று வெள்ளந்தியாக பேசினார்.

எடிட்டர் சாபு ஜோசப் பேசும்போது, என்னோட 12 வருஷ கனவு நிறைவேறியிருக்கு. ஜில்லுன்னு ஒரு காதல் படத்தோட போஸ்டர பாக்கும்போது, ஞானவேல்ராஜா சார் கூட படம் பண்ணுவேனான்னு சந்தேகமா இருந்தது. இப்போ 12 வருஷம் கழிச்சி மஹாமுனி படத்துக்கு எடிட்டரா ஒர்க் பண்றேங்கிறது, என்னோட வாழ்க்கையில நான் கண்ட கனவை ஜெயிச்சிருக்கேன், என்று பேசினார்.

நடிகர் ஜி.எம்.சுந்தர் பேசும்போது, இந்தப் படத்தோடு தலைப்புக்கு ஏற்ற மாதிரியே இயக்குநரும் மஹாமுனி தான். இவர் ஒரு தத்துவஞானி தான். நான் இவரை மீட் பண்ணியதே ஒரு ஃபிலிம் ஃபெஸ்டிவல்ல தான். நானே அவரிடம் போய், மவுனகுரு படம் நல்லா இருக்கு சார் என்று சொன்னேன். அதைக்கேட்டு அவர் எதுவும் பேசாமல் அமைதியாக தலையாட்டிவிட்டு சென்றுவிட்டார்.

திடீரென ஒரு நாள் எனக்கு ஃபோன் பண்ணி இந்தப் படத்துல நடிக்க சான்ஸ் கொடுத்திருக்கார். மொத்தத்தில் இவரைப் பற்றி சொல்ல வேண்டுமானால் அனைத்து விஷயங்களும் தெரிந்த ஒரு தத்துவஞானியின் வடிவமாக உள்ளார் என்று இயக்குநரை பாராட்டி பேசினார்.

நடிகர் ஆர்யா பேசும்போது, இந்தப்படத்தோட டீசர், ஸ்னிக் பிக் ரிலீஸாகும்போது இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கலை. அதேமாதிரி டைரக்டர் என்னை ரெண்டு வாட்டி மீட் பண்ணினார். ரெண்டு வாட்டியும் எங்கிட்ட கதைய சொல்லலை. மூணாவது தடவை மீட் பண்ணும்போது தான் கதைய சொன்னார். அதுவும் ஒரு கேரக்டர பத்தி மட்டும் தான் சொன்னார். இன்னொரு கேரக்டரை பத்தி சூட்டிங் ஸ்பாட்ல பாத்துக்கலாம்னு சொல்லிட்டு சஸ்பென்ஸ் வச்சிட்டார். ஆனால், சூட்டிங் ஸ்பாட் வந்து தான் ரெண்டாவது கேரக்டரை நான் புரிஞ்சிகிட்டேன் என்று பேசினார்.

English summary
I never dreamed that I would play this kind of character. Mahima Nambiar speaking at the press conference of the Mahamuni film.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more