நீதான் எப்போதும் பெஸ்ட் - செம ஆட்டம் போட்ட மனைவிக்கு ஆர்யா பாராட்டு
சென்னை: பத்து தல படத்தில் ராவடி பாடலுக்கு நடனமாடிய தனது மனைவி சாயிஷாவுக்கு நடிகர் ஆர்யா பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பத்து தல. ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறர்.

கம்பேக் கொடுத்த சிம்பு
மாநாடு படம் மூலம் கோலிவுட்டில் கம்பேக் கொடுத்த நடிகர் சிலம்பரசன் தனது இரண்டாவது இன்னிங்ஸில் படு உற்சாகத்துடன் காணப்படுகிறார். அந்தவகையில் அவர் நடித்த வெந்து தணிந்தது காடு படமும் ஹிட்டாக அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார் சிம்பு. அதன்படி சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் தற்பொது நடித்திருக்கிறார். இந்தப் படமானது கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கிறது.

கவனம் ஈர்த்த பத்து தல ட்ரெய்லர்
சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் மார்ச் 30ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கேஜிஆர் கதாபாத்திரத்தில் தோன்றும் சிம்புவை திரையில் பார்ப்பதற்கு மிகுந்த ஆவலோடு இருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ந்து இரண்டு படங்களை ஹிட் கொடுத்த சிம்பு ஹாட்ரிக் வெற்றியை அளிப்பார் என்ற நம்பிக்கையிலும் அவர்கள் இருக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பட்டையை கிளப்பும் பாடல்கள்
படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இதன் முதல் பாடலாக பட்டம் அடி பட்டம் பாடல் வெளியாகி பலரையும் முணுமுணுக்க வைத்தது. அதனையடுத்து வெளியான பாடலும் ஹிட்டாக தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவில் படத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டன. எதிர்பார்த்தபடியே ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகத்தில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ராவடி பாடல் வீடியோ வெளியீடு
இந்நிலையில் பத்து தல படத்தின் ராவடி பாடல் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடலுக்கு நடிகையும், ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா நடனம் ஆடியிருக்கிறார். க்ளாமராக ஆடியிருக்கும் சாயிஷாவை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப்போயினர். அதுமட்டுமின்றி புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் ஆடிய சமந்தாவை சாயிஷா ஓவர்டேக் செய்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறினர்.

மனைவிக்கு ஆர்யாவின் பாராட்டு
சாயிஷாவின் நடனத்துக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர். அந்தவகையில் அவரது கணவரும், நடிகருமான ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ராவடி பாடல் வீடியோவை பகிர்ந்து, "பெரிய திரையில் காண்பதற்கு காத்திருக்க முடியவில்லை. நீ ஒரு பெஸ்ட். இது வெறும் தொடக்கம்தான்" என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











