சந்தானத்தை நம்பி கோடிகளைக் கொட்டும் ஆர்யா.. சூரிக்கு போட்டியாக களமிறங்குதா சந்தானம் அண்ட் கோ?

சென்னை: தமிழ் சினிமாவில் ஒருசில நடிகர்கள் தங்களது சரியான முடிவுகளால் உச்சம் தொட்டுள்ளனர். ஒருசிலர் தவறான முடிவுகளால் காணாமல் கூட போயுள்ளனர். ஆனால் இவரின் முடிவு சரியா இல்லை தவறா என ரசிகர்களால் ஒரு முடிவுக்கு வரமுடியாத அளவுக்கு தமிழ் சினிமாவில் ஒருவர் உள்ளார் என்றால் அது நடிகர் சந்தானம் தான்.

Arya Santhanam Kollywood News Tamil Cinema

விஜய் டீவியின் லொள்ளு சாபாவில் இருந்து சினிமாவில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, சினிமாவுக்கு வந்தவர் சந்தானம். வடிவேலு, விவேக் என இரு பெரும் ஜாம்பவான்கள் இருந்தபோது தமிழ் சினிமாவிற்குள் வந்த சந்தானம், தனது நகைச்சுவை திறமையினால் மெல்ல மெல்ல வெளியே தெரிய ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் வடிவேலு சினிமாவில் இருந்து விலகியிருக்க, அது சந்தானத்திற்கு மிகப்பெரிய களத்தை அமைத்துக் கொடுத்தது.

Arya Santhanam Kollywood News Tamil Cinema

சந்தானம் வளர்ச்சி: இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகனாக மாறினார். ஒரு கட்டத்தில் இவர் நடிக்காத தமிழ் படங்களே இல்லை எனும் அளவிற்கு ரொம்பவும் பிஸியாக நடித்துக் கொண்டு இருந்தார். விஜய் டீவியில் இருந்த சிவகார்த்திகேயன் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கியதும், சந்தானம் காமெடியனாக நடிப்பதை தவிர்த்துவிட்டு கதாநாயகனாக நடிப்பது என முடிவெடுத்தார் என கூறப்படுகின்றது.

Arya Santhanam Kollywood News Tamil Cinema

கதாநாயகன்: கதாநாயகனாக சந்தானமும் இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். ஆண்டுக்கு குறைந்தது இரண்டு படங்களாவது கொடுத்து விடுகின்றார். ஒருசில படங்களுகு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கின்றது. ஒரு சில படங்கள் எடுபடுவதில்லை. இவரது நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட படங்களில் ஒன்று டிடி ரிட்டன்ஸ்.

Arya Santhanam Kollywood News Tamil Cinema

சூரி: இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படவுள்ளதாகவும், அந்த படத்தை ஆர்யா தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஏற்கனவே நடிகர் சூரியை மக்கள் மத்தியில் கதாநாயகனாக வெற்றிகரமாக கொண்டு வந்து சேர்த்ததில் இயக்குநர் வெற்றிமாறன், சசிகுமார் நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு முக்கிய பங்கு உள்ளது. சூரி நடிப்பில் ஏற்கனவே விடுதலை படத்தின் முதல் பாகமும் கருடன் படமும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்னும் இவரது நடிப்பில் கொட்டுக்காளி, விடுதலை பாகம் 2, எழு மலை ஏழு கடல் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.

Arya Santhanam Kollywood News Tamil Cinema

தயாரிப்பாளர் ஆர்யா: இதனைக் காரணம் காட்டி, ஒரு நண்பனாக நீ எனக்கு இதைமட்டும் செய் எனக் கூறி டிடி ரிட்டன்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஆர்யாவை ஒப்புக்கொள்ள வைத்தார் என்றும் இந்த படத்தில் மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கவுள்ளார் எனவும் பேச்சுகள் கோலிவுட் வட்டாரத்தில் அடிபடுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X