முகத்தோடு முகம் வைத்து .. மனைவியை கொஞ்சி மகிழ்ந்து.. ஆர்யா ரொமான்ஸ்!
சென்னை : ஆர்யாவும் சாயீஷாவும் கஜினிகாந்த் படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு, சூர்யாவின் காப்பான் படத்திலும் சேர்த்து நடித்தனர். இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டனர்.
இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட சாக்லேட் பாயாக வலம் வந்த ஆர்யா, யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் சட்டுபுட்டுனு சாயீஷாவை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அந்த தம்பதிகளை அனைவரும் வியந்து பாராட்டும் அளவுக்கு அழகாக மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்த்து வருகின்றனர்.

டெடியில் மீண்டும் ஜோடி
கோலிவுட்டின் க்யூட் கப்புல்லாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்த ஜோடி தற்போது டெடி படத்தின் மூலம் மீண்டும் இணைந்த நடித்துள்ளனர்.இந்த படம் கடந்த மாதம் ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

குட்டீஸு க்கு பிடித்த டெடி
டெடி படம் குழந்தைகள் விரும்பி பார்க்கும் படமாக மாறி உள்ளது. இப்படத்தில் சாயீஷா ஸ்ரீ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைப்படி சாயீஷாவின் ஆத்மா டெடி பொம்மைக்குள் சென்றுவிடும். அதனால் அந்த டெடி பொம்மை பேசுவது, நடப்பது அனைத்தும் ரசிக்கும் படி இருந்தது. குட்டீஸ் இந்த படத்தை வெகுவாக கொண்டாடிவருகின்றனர்.

என் இனிய தனிமையே
குழந்தைகள் விரும்பும் படமாக இருந்தாலும், இப்படத்தில் ஒரு அழகான காதல் சொல்லப்பட்டு இருக்கும். மேலும் ஸ்ரீ கதாபாத்தில் சாயீஷா அழகாக நடித்து இருப்பார்.இப்படத்தில் இடம் பெற்ற என் இனிய தனிமையே, என் நண்பியே பாடல் அனைவரையும் மெய் மறக்கவைத்துள்ளது.
வைரல் பிக்ஸ்
இந்நிலையில், ஆர்யா தனது மனைவி சாயீஷாவை கட்டி அணைந்து முகத்தோடு முகம் வைத்து, விழிகள் மூடி மை டெடி ஸ்ரீ (My Teddy##Shri) என பதிவிட்டுள்ளார். இந்த ரொமான்டிக்கான புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இணையத்தில் இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











