மீண்டும் இணைந்த டெடி கூட்டணி... சூட்டிங்கே முடிஞ்சிடுச்சாம்பா!

சென்னை : நடிகர் ஆர்யா மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி இணைந்து டெடி படத்தை வெளியிட்டது.

இந்தப் படம் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்தது. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

தற்போது இந்தப் படம் குறித்து முக்கியமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் ஆர்யா

நடிகர் ஆர்யா

நடிகர் ஆர்யா சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்கள் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இரண்டு படங்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை.

 டெடி படம்

டெடி படம்

டெடி படத்தை இயக்கியிருந்தார் இயக்குநரும் தயாரிப்பாளருமான சக்தி சௌந்தர்ராஜன். டெடி படத்தில் சாயிஷாவுடன் இணைந்து நடித்திருந்தார் ஆர்யா. இந்தப் படம் சயின்ஸ் பிக்ஷன் படமாக வெளியானது. சிறப்பான திரைக்கதையும் படத்திற்கு வலு சேர்த்தது.

மீண்டும் இணைந்த கூட்டணி

மீண்டும் இணைந்த கூட்டணி

இந்நிலையில் இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்து கேப்டன் என்ற படத்தை உருவாக்கி வருகிறது. படத்திற்கு கேப்டன் என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்தப் படமும் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வருகிறது. படத்தை திங்க் ஸ்டூடியோஸ் மற்றும் ஆர்யாவின் தி ஷோ பீபிள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது.

அக்டோபரில் துவங்கிய சூட்டிங்

அக்டோபரில் துவங்கிய சூட்டிங்

கடந்த அக்டோபரில் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு ஒரே மூச்சில் நடந்த நிலையில், தற்போது படத்தின் சூப்பர் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது. படத்தின் சூட்டிங் நிறைவடைந்ததாக தெரிவக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி சக்தி சௌந்தர்ராஜன் படப்பிடிப்பை முடித்துள்ளதாக ஆர்யா தயாரிப்பாளராக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

விரைவில் ரிலீஸ்?

விரைவில் ரிலீஸ்?

படத்தின் முக்கிய காட்சிகள் வட இந்தியாவின் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குலு மணாலியிலும் இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளும் துவங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கலாம்.

 இமான் இசை

இமான் இசை

படத்தில் ஆர்யாவுடன் சிம்ரன், ஐஸ்வர்யா லஷ்மி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். டி இமான் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர்யாவின் முந்தைய படங்கள் வெற்றிப் பெற்றுள்ள நிலையில், இந்தப் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X