twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆர்யாவின் டெடி..சித்தார்த்தின் டக்கர்.. நேரடியாக OTTயில் ரிலீஸ் ?

    |

    சென்னை : ஆர்யாவின் டெடி திரைப்படமும், சித்தார்த்தின் டக்கர் திரைப்படமும் நேரடியாக OTTயில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சில மாதங்களுக்கு முன்பு ஆர்யா நடிப்பில் வித்யாசமாக தயாராகி வந்த டெடி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுவரை விலங்குகள் திரைப்படங்களில் பேசுவதாக சித்தரிக்கப்பட்டு படங்கள் வெளியான நிலையில் தற்போது டெடி பொம்மை பேசுவதாக வெளியாகி இருந்த டெடி படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்துள்ளது.
    இந்தப்படம் ஜூன் மாதம் திரையில் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் இப்போதுள்ள கொரானா வைரஸ் தாக்கத்தினால் இந்த படம் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

    அக்ஷய்குமார் நடிக்கும் பெல் பாட்டம் படம் குறித்த முக்கிய அறிவிப்பு.. லண்டன் பறக்கும் படக்குழு!அக்ஷய்குமார் நடிக்கும் பெல் பாட்டம் படம் குறித்த முக்கிய அறிவிப்பு.. லண்டன் பறக்கும் படக்குழு!

    வித்தியாசம் காட்டி

    வித்தியாசம் காட்டி

    தனது ஒவ்வொரு படங்களின் மூலமும் புதுமைகளை புகுத்தி படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி வரும் இளம் இயக்குனர்களில் சமீபகாலத்தில் அனைவராலும் உற்று நோக்கப்படும் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன்.

    ஜாம்பி கதை

    ஜாம்பி கதை

    நாணயம், நாய்கள் ஜாக்கிரதை போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கி அதில் வெற்றி பெற்று வந்த சக்தி சௌந்தர் ராஜன் ஹாலிவுட் படங்களில் மட்டுமே பெரும்பாலும் காட்டப்பட்டு வந்த ஜாம்பி கதைகளை மையமாக கொண்ட திரைப்படங்கள் தமிழில் முதன்முதலில் இயக்கினார்.

    லட்சுமி மேனன்

    லட்சுமி மேனன்

    தமிழ்த் திரைப்படத் துறையில் ஜாம்பி மூவி இயக்கிய முதல் இயக்குனர் என்ற பெருமை பெற்ற சக்தி சௌந்தர் ராஜன் அந்த படத்தை நடிகர் ஜெயம் ரவி மற்றும் லட்சுமி மேனன் நடிக்க இவர் இயக்கியிருந்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    டிக் டிக் டிக்

    டிக் டிக் டிக்

    இந்நிலையில் மீண்டும் புதிதாக ஏதாவது பண்ண வேண்டுமென சிந்தித்து வரும் சக்தி சௌந்தர் ராஜன் மீண்டும் ஜெயம் ரவியை வைத்து அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் டிக் டிக் டிக் என்ற விண்வெளி படத்தை தமிழில் எடுத்திருந்தார். இந்த படம் தமிழில் வெளியான இரண்டாவது விண்வெளி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    பொம்மை பேசுவது

    பொம்மை பேசுவது

    இவ்வாறு இயக்குனர்கள் பலரும் இயக்க தயங்கி வரும் பல கதைகளை இயக்கி வளர்ந்துவரும் இளம் இயக்குனர்களுக்கு முன்னோடியாக விளங்கி வரும் சக்தி சௌந்தர் ராஜன் தற்பொழுது உருவாக்கி வரும் படம் டெடி . நடிகர் ஆர்யாவுடன் முதன்முதலில் இணைந்திருக்கும் இந்த படத்தில் டெடி பொம்மை பேசுவது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது.

    மோஷன் கேப்சர்

    மோஷன் கேப்சர்

    தமிழ் ரசிகர்களுக்கு முற்றிலும் புதுமையான கதை களத்தை கொண்ட இந்த திரைப்படம் 2012 ஆம் ஆண்டு வெளியான டெட் என்ற ஹாலிவுட் திரைப்படத்தை மையக்கருவாக கொண்டு எடுக்கப்பட்டது. முற்றிலும் வித்தியாசமான அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான கோச்சடையான் திரைப்படத்திற்குப் பிறகு மோஷன் கேப்சர் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் இந்திய திரைதுறையில் மிகப்பெரிய மைல் கல்லாக இருக்கும்.

    ஓரிரு மாதங்களில் OTT

    ஓரிரு மாதங்களில் OTT

    ஆர்யா, சாயிஷா மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனி போன்றோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில் இந்த படத்தை ஜூன் மாதம் திரையில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்த நிலையில் தற்போது உள்ள கொரானா சூழ்நிலை காரணமாக இந்த படம் இன்னும் ஓரிரு மாதங்களில் OTT தளத்தில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    டக்கர்

    டக்கர்

    பொன்மகள் வந்தாள், பெண்குயின் போன்ற திரைப்படங்கள் OTTயில் வெளியாகி வெற்றிகரமாக ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் இந்த மாதம் யோகி பாபு நடித்த காக்டெயில் திரைப்படமும் OTTயில் வெளியாக உள்ளது. மேலும் வைபவ் நடிப்பில் கப்பல் படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கும் இரண்டாவது படமான டக்கர் திரைப்படம் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகி இருந்தது. இதன் பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படமும் கூடிய விரைவிலேயே OTTயில் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

    English summary
    Actor Arya’s Teddy, Actor Siddharth's Takkar movie to release on OTT
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X