என்னது சாயீஷா கர்ப்பமா? தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி!

சென்னை : நடிகர் ஆர்யாவின் மனைவி சாயீஷா கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி வேகமாக பரவி வருகிறது.

Recommended Video

Sayyesha Pregnant? Official Announcement | Arya Sayyesha, Teddy, Salpetta

தெலுங்கு,ஹிந்தி தமிழ் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார் சாயீஷா ,தெலுங்கு சினிமாவில் அகில் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சாயீஷா, பிறகு ஹிந்தியில் ஷிவாய் படத்தில் நடித்தார் ,வனமகன் என்ற தமிழ் படம் மூலம் அறியப்பட்டார் .

நடிப்பில் மட்டும் அல்லாமல் நடனத்திலும் அம்மணி டாப் தான். கடைக்குட்டி சிங்கம் என்ற படம் இவருக்கு நல்ல பெயரையே பெற்று தந்தது.

நடிகர் ஆர்யா

நடிகர் ஆர்யா

சாயீஷாவும் , நடிகர் ஆர்யாவும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பத்தாம் தேதி திருமணம் செய்து கொண்டனர் .சினிமா நட்சத்திரங்கள்,நண்பர்கள்,உறவினர்கள் என்று பலர் திருமணத்தில் கலந்து கொண்டனர் .சென்னையில் பிரமாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கணவன், மனைவி

கணவன், மனைவி

எப்போதும் சமூகவலைத்தளங்களில் பிஸியாகவே இருக்கும் சாயீஷா பல விதமாக உணவுகளை சமைப்பதையும், யோகா செய்வது, நடனம் ஆடுவது போன்ற அனைத்தையும் சமூகவலைத்தளத்தில் பகிர்வார். ஆர்யாவுடன் எடுத்த புகைப்படங்களையும் தொடர்ந்து பகிர்வதை வழக்கமாகவே கொண்டு இருக்கிறார் .

வித்யாசம்

வித்யாசம்

எப்போதும் நடனத்தில் ஆர்வம் கொண்ட சாயீஷா ,அவ்வப்போது பல நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டு வந்தார். அதுவும் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பதிவு தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். அது என்னவென்றால் எப்போதும் டைட்டாக உடை அணிந்து இருக்கும் சாயீஷா ,அதில் மிகவும் மெல்லிசான லூசாக இருக்கும் சுடிதார் அணிந்து இருந்தார், அதிலும் அவர் பார்ப்பதற்கு முன்னைவிட கொஞ்சம் குண்டாகி இருக்கிறார் என்று பலரும் கமெண்ட்ஸ் செய்து வந்தனர்.

கர்ப்பம்

கர்ப்பம்

இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் சயீஷா கர்ப்பமாக இருக்கலாம் என்ற செய்தி வெளிவர தொடங்கியது. இது ஆர்யா ,மற்றும் சாயீஷா ரசிகர்களிடையே மிகவும் வைரலாக பரவியது, இது இவர்களது ரசிகர்களிடையியே பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தியது.

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

இந்த வதந்திகள் வெளியானதை பார்த்த இவர்கள் இந்த விஷயத்திற்கு முற்று புள்ளி வைத்துள்ளனர். மேலும் சாயீஷாவின் அம்மா சாயீஷா கர்ப்பமாகவில்லை என்றும், செய்தி வெறும் வதந்தி என்றும் இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடிகர் ஆர்யாவும், சாயீஷாவும் இணைந்து நடித்த படமான டெடி ரிலீஸ் தேதிக்காக அவர்களது ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கும் நிலையில் இது போன்ற வதந்திகள் பரவி வந்தது .மேலும் சயீஷா கன்னடத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X