பட்டாசு கடையில் வைக்கப்பட்டிருந்த பொண்டாட்டியின் போட்டோ.. கடுப்பான ஆர்யா.. செய்த வேலைய பாருங்க!

சென்னை: நடிகர் ஆர்யா, பட்டாசு கடையில் வைக்கப்பட்டிருந்த தனது மனைவியின் போட்டோவை பார்த்து கடுப்பாகி செய்த காரியம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா. நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, உள்ளிட்ட படங்களை கொடுத்துள்ளார்.

ஆர்யா திருமணம்

ஆர்யா திருமணம்

நடிகர் ஆர்யா, தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை சாயிஷா மும்பையை பூர்விகமாக கொண்டவர். 2015ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அகில் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

முன்னணி நடிகையாக..

முன்னணி நடிகையாக..

பின்னர் 2017ஆம் ஆண்டில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வன மகன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் சாயிஷா.அடுத்தடுத்த கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான் என தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சர்ச்சையில் ஆர்யா

சர்ச்சையில் ஆர்யா

ஆர்யாவும் சாயிஷாவும் தற்போது டெடி என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஆர்யா தனது மனைவி தொடர்பாக ஆவேசமாகி ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஜிம்முக்கு சென்ற ஆர்யா

ஜிம்முக்கு சென்ற ஆர்யா

அதாவது நடிகர் ஆர்யாவுக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்று ஜிம்மில் வொர்க் அவுட் செய்வது. அந்த வகையில் நேற்றும் வழக்கம் போல் தான் வொர்க் அவுட் செய்யும் ஜிம்மிற்கு சென்றுள்ளார் ஆர்யா.

கடுப்பான ஆர்யா

கடுப்பான ஆர்யா

அவர் வொர்க் அவுட் செய்யும் ஜிம்முக்கு எதிரே தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடை போடப்பட்டுள்ளது.
அந்த பட்டாசு கடையில் தனது மனைவி சாயிஷாவின் பேனரை வைத்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனை பார்த்த ஆர்யா செம கடுப்பாகியுள்ளார்.

பேனரை அகற்ற வேண்டும்

பேனரை அகற்ற வேண்டும்

இதனை தொடர்ந்து அந்த பேனரை அகற்ற வேண்டும் என முடிவு செய்த ஆர்யா, நேரடியாக அவர்களிடம் சொல்லாமல், ஜிம் உரிமையாளர்கள் மூலம் பட்டாசு கடை உரிமையாளர்களிடம் சொல்லி தனது மனைவியின் படம் இடம்பெற்ற பேனரை அகற்ற வைத்துள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

பட்டாசு விளம்பரத்திற்காக தனது மனைவியின் படம் பயன்படுத்தப்பட்டதை பொறுத்துக்கொள்ள முடியாமல் நடிகர் ஆர்யா, பேனரை அகற்ற வைத்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X