சுந்தர் சி, உதயநிதி டார்லிங்கிற்கு அரண்மனை 3 நாயகன் நன்றி
சென்னை : நடிகர் ஆர்யா, ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் உலக அளவில் வெளியாகியுள்ளது அரண்மனை 3.
இந்தப் படம் டாக்டர் படத்தை தொடர்ந்து திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் நாயகன் ஆர்யா படத்தின் டைரக்டர் சுந்தர் சி மற்றும் உதய நிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அரண்மனை 3 படம்
நடிகர் ஆர்யா, ராஷி கண்ணா, ஆன்ட்ரியா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் உலகளவில் திரையிடப்பட்டுள்ளது அரண்மனை 3. முந்தைய படங்கள் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பையடுத்து இந்தப் படமும் அந்த வகையில் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சுந்தர் சி இயக்கம்
நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அவரது அவ்னி கிரியேஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை வெளியிட்டுள்ளது. நகைச்சுவை ஹாரர் பாணியில் படம் எடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் விவேக்
முந்தைய படங்களின் தாக்கம் இந்தப் படத்தில் இருக்காது என்று இயக்குநர் சுந்தர் சி முன்னதாக தெரிவித்துள்ளார். ஆனால் முந்தைய படங்களை போலவே படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார், மேலும் படத்தில் சமீபத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் படத்தில் இடம்பெற்றுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது.

சத்யா சி இசை
மேலும் படத்தில் யோகிபாபு, மனோபாலா உள்ளிட்டவர்களும் உள்ளதால் நகைச்சுவையில் கடந்த படங்களை போலவே இந்தப் படமும் பின்னி பெடலெடுக்கும் என்று நம்பப்படுகிறது. படத்திற்கு சத்யா சி இசையமைத்துள்ளார். படத்தின் ஓடிடி உரிமையை ஜீ நிறுவனமும் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சியும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்யா மகிழ்ச்சிப்பதிவு
இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ரிலீசையொட்டி படத்தின் நாயகன் ஆர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படத்தின் இயக்குநர் சுந்தர் சி மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரின் முயற்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் படம் ரிலீசாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ரசிகர்களிடம் வேண்டுகோள்
மக்கள் அனைவரும் தங்களது அருகிலுள்ள திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்த்து கொண்டாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினை டார்லிங் என்று குறிப்பிட்டு அவர் இந்த பதிவை பதிவிட்டுள்ளார். மேலும் படத்தின் பிரம்மாண்டமான போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











