உருவாகிறது அரண்மனை 3... மிரட்ட வரும் அடுத்த பேய்... ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?
சென்னை: இயக்குனர் சுந்தர் சி, அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க இருக்கிறார்.
சுந்தர் சி இயக்கத்தில் வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம், கோவை சரளா உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், அரண்மனை. யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
பேய் படமான இது, கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார்.

த்ரிஷா, ஹன்சிகா
இதில், த்ரிஷா, சித்தார்த், ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி உட்பட பலர் நடித்திருந்தனர். 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படமும் பேசப்பட்டது. இதை சுந்தர். சியின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

மூன்றாம் பாகம்
இந்நிலையில் இதன் மூன்றாம் பாகத்தை சுந்தர். சி இயக்க உள்ளார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் ஹீரோவாக நடிக்க ஆர்யாவிடம் பேசியுள்ளனர்.

ராஷி கண்ணா
ஹீரோயினாக, ராஷி கண்ணா நடிப்பார் என்று தெரிகிறது. இவர் தமிழில், அடங்கமறு, அயோக்யா படங்களில் நடித்தவர். இன்னும் இரண்டு ஹீரோயினும் ஒரு முன்னணி ஹீரோவும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மற்றும் விவேக், யோகிபாபு உட்பட பலர் நடிக்க உள்ளனர்.

காமெடி
இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. அதற்கான வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இது முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

ஆக்ஷன்
இயக்குனர் சுந்தர். சி சமீபத்தில் விஷால் நடித்த ஆக்ஷன் படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் தோல்வி அடைந்ததால், மீண்டும் காமெடி ஹாரர் பக்கம் திரும்பி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











