Don't Miss!
- Automobiles
நெதர்லாந்து மக்களின் மூளையே மூளைதான்... சைக்கிள்களை நிறுத்துவதற்கு ரூ.533 கோடியில் பார்க்கிங் பகுதி!!
- Finance
5 ஆண்டுகளில் 4 மடங்கு FDI வளர்ச்சி.. கெத்து காட்டும் பார்மா துறை.. பொருளாதார ஆய்வறிக்கையில் பளிச்!
- Technology
உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone 2 பற்றி தீயாய் பரவும் செய்தி.!
- News
ரூ 10 கோடி கொடுக்காட்டி என்னை கொன்று விடுவாராம்.. 3வது மனைவி ரம்யா மீது நடிகர் நரேஷ் பாபு புகார்
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 5 ராசிக்காரங்க வெற்றிப்படிக்கட்டில் வேகமா ஏறப்போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
2வது டி20ல் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் இந்தியா வைத்த கோரிக்கை.. அதிகாரி அதிரடி நீக்கம்- விவரம்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆர்யா என்ற ஜாம்ஷத்.. புதுசா கிளப்பி விட்ட ஆர்யா.. தொடர்ந்த கார்த்தி, சந்தானம் உள்ளிட்டோர்!
சென்னை : நடிகர் ஆர்யா அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் கேப்டன் என்ற படம் ரிலீஸ் ஆனது.
இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பு கிடையில் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை கொடுத்தது.
அடுத்ததாக தி வில்லேஜ் என்ற வெப் சீரீஸில் ஆர்யா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.
தெய்வமே..
அந்த
மனசு
இருக்கே..
கலகத்
தலைவன்
படத்தை
வாழ்த்திய
ஆர்யா..
கிண்டல்
செய்யும்
ரசிகர்கள்!

நடிகர் ஆர்யா
நடிகர் ஆர்யா கடந்த 2005ஆம் ஆண்டில் வெளியான அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இந்த படம் இவருக்கு சிறப்பான என்ட்ரி தமிழ் சினிமாவில் கொடுத்தது. இந்தப் படத்தில் இடம் பெற்ற தீப்பிடிக்க தீப்பிடிக்க என்ற பாடல் மூலம் ரசிகர்களின் இதயத்தில் தீப்பிடிக்க வைத்தார்.

அடுத்தடுத்த படங்கள்
தொடர்ந்து ஓரம்போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் என 25க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான சார்பட்டா பரம்பரை படம் இவருக்கு சிறப்பாக கை கொடுத்தது.

சார்ப்பட்டா பரம்பரை படம்
பீரியட் படமாக வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் குத்துச்சண்டையை கதைகளமாக கொண்டிருந்தார் பா ரஞ்சித். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக அமைந்திருந்தது. தொடர்ந்து சமீபத்தில் இவரது நடிப்பில் கேப்டன் என்ற படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

தி வில்லேஜ் வெப் தொடர்
இதையடுத்து இவரது நடிப்பில் தி வில்லேஜ் என்ற வெப் சீரிஸ் உருவாகி வருகிறது. நடிப்பு மட்டுமின்றி சைக்கிளிங்கிலும் இவர் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற 1540 கிலோமீட்டர்ஸ் சைக்கிளிங் போட்டியை நிறைவு செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

சாயிஷாவுடன் திருமணம்
சமீபத்தில் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார் ஆர்யா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆர்யா தற்போது தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஆர்யா என்ற ஜாம்ஷத் என ட்வீட் செய்துள்ளார். தொடர்ந்து உங்களுடைய இன்னொரு பெயர் என்ன பாஸ் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

எனக்கு இன்னொரு பெயர் இருக்கு
எனக்கு இன்னொரு பெயர் இருக்கு என்றும் தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டில் நடிகர்கள் விஷால், கார்த்தி, மாதவன், சந்தானம், ஜீவா உள்ளிட்ட அனைவரையும் டேக் செய்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள நடிகர் கார்த்தி, கார்த்தி என்ற ஜப்பான் என்று பதில் பதிவை வெளியிட்டுள்ளார். இதே போல நடிகர் சந்தானமும், சந்தானம் என்ற சாண்டா என்று பதில் பதிவை வெளியிட்டுள்ளார். நடிகர் ஷாம், ஷாம் என்ற அம்ஞ்சு என்று தெரிவித்துள்ளார்.

ஆர்யாவின் ட்வீட்
ஆர்யாவின் இயற்பெயர் ஜாம்ஷத். சினிமாவிற்காக அவர் ஆர்யாவாக மாறியுள்ளார். இதைத்தொடர்ந்து ஆர்யா என்ற ஜாம்ஷத் என்று அவர் தன்னுடைய இயற்பெயரை வைத்து இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். இதனிடையே மற்றவர்களையும் இதில் டேக் செய்து அவர்களின் இயற்பெயர் அல்லது மற்றொரு பெயரை பதிவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு பிரபல நடிகர்களும் தற்போது தங்களது மற்றொரு பெயரை பதிவிட்டு இணையதளத்தை சுவாரசியமாக்கி உள்ளனர்.