Actor Arya: அடுத்த ரவுண்டுக்கு தயாராகுங்க.. சார்பட்டா 2 சூட்டிங் எப்ப.. அப்டேட் கொடுத்த ஆர்யா!

சென்னை: நடிகர் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2021ம் ஆண்டில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. 1960களில் வடசென்னையில் செயல்பட்ட இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை இடையிலான மோதலை மையமாக வைத்து இந்தப் படத்தை பா ரஞ்சித் இயக்கியிருந்தார்.

இந்த படத்தின் 2வது பாகம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் சூட்டிங் அப்டேட்டை நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். சென்னையில் உணவக திறப்பு விழாவில் பங்கேற்ற ஆர்யா விளையாட்டு மற்றும் சினிமா இரண்டுமே தனக்கு மிகவும் பிடித்தமானது என்று தெரிவித்துள்ளார்.

arya pa ranjith

சார்பட்டா பரம்பரை படம்: பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா. பசுபதி. ஜான் விஜய், ஜான் கொக்கன், துஷாரா விஜயன், ஷபீர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்த சார்பட்டா பரம்பரை படம் கடந்த 2021ம் ஆண்டில் அமேசான் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கடந்த 1960ம் ஆண்டுகளில் வடசென்னையில் செயல்பட்ட இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை இடையிலான மோதலை மையமாக கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்திருந்தார் பா ரஞ்சித். படம் ஓடிடியில் வெளியான நிலையில் திரையரங்குகளில் வெளியாகி இருக்க வேண்டும் என்று படத்தைப் பார்த்த அனைவருமே பாராட்டி பேசினர்.

மறக்க முடியாத கேரக்டர்கள்: அந்த வகையில் இந்த படத்தின் கபிலன், ரங்கன் வாத்தியார், டாடி, வேம்புலி, டான்சிங் ரோஸ், மாஞ்சா கண்ணன், துரைக்கண்ணு வாத்தியார் என ஒவ்வொரு கேரக்டரும் தற்போதும் ரசிகர்களின் நினைவில் நீங்காதவையாகவே உள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் 2வது பாகம் உருவாகவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் சூட்டிங் அப்டேட் குறித்து நடிகர் ஆர்யா தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். சென்னையில் உணவக திறப்பு விழாவில் கலந்துக் கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்யா இதை கூறியுள்ளார்.

சார்பட்டா பரம்பரை 2 சூட்டிங் அப்டேட்: சார்பட்டா பரம்பரை 2 படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக அவர் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாவது நல்ல விஷயம்தான் என்று ஆர்யா பேசியுள்ளார். முதல் பாகம் ஏற்படுத்திய பாதிப்பில் அந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்படும் என்றும் ஆனால் படம் நன்றாக இருந்தால் மட்டுமே ஓடும் என்றும் கூறியுள்ளார். தற்போது ஸ்போர்ட்ஸிலும் அதிக ஆர்வம் காட்டி வரும் தனக்கு சினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் இரண்டுமே பிடித்துள்ளதாகவும் ஆர்யா குறிப்பிட்டுள்ளார். படம் குறித்த விமர்சனங்களை ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

arya pa ranjith

விமர்சனங்கள் குறித்து ஆர்யா: விமர்சனங்களை தாண்டி படம் நன்றாக இருந்தால் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறும் என்றும் ஆர்யா கூறியுள்ளார். பீரியட் படமாக குத்துச்சண்டையையும் அதிலுள்ள அரசியலையும் கதைக்களமாக கொண்டு சார்பட்டா பரம்பரை படம் வெளியானது. இந்தப் படம் ஆர்யா கேரியரில் மட்டுமில்லாமல் துஷாரா விஜயன், ஜான் கொக்கன், பசுபதி என அனைத்து நடிகர்களுக்கும் மிகப்பெரிய பெஸ்ட் படமாக அமைந்தது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து திடீரென அறிவித்து படக்குழுவினர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில் அடுத்ததாக இந்தப் படத்தில் பா ரஞ்சித் இணையவுள்ளது ஆர்யாவின் இந்த பேட்டியால் தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Read more about: arya pa ranjith ஆர்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X