பான் இந்திய படம் சைந்தவ்.. மரண மாஸ் லுக்.. சம்பவம் செய்ய காத்திருக்கும் ஆர்யா!

சென்னை: சைந்தவ் திரைப்படத்தில் ஆர்யா வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காதர்பாட்ஷா திரைப்படம் சுமாராக ஓடியது.

Actor Aryas saindhav movie marana mass first look out

அவன் இவன், நான் கடவுள், மதராசபட்டிணம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்த ஆர்யா 2019ம் ஆண்டு சாயிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ராவடி ஆட்டம்: நடிகர் ஆர்யா, சாயிஷாவுடன் கஜினிகாந்த் திரைப்படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்கக் தொடங்கினர். இதையடுத்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு அர்யானா என்ற மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்காமல் இருந்த சாயிஷா, அண்மையில் வெளியான பத்து தல படத்தில் வரும் ஐட்டம் பாடலான ராவடி பாடலுக்கு இறங்கி ஆட்டம் போட்டிருந்தார்.

சைந்தவ்: நடிகர் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு வெளியான அரண்மனை3, எனிமி, காதர் பாட்ஷா போன்ற எந்த படங்களும் வெற்றிப்பறெவில்லை தற்போது ஆர்யா, 'சைந்தவ்' என்ற படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஹிட் படங்களை இயக்கிய சைலேஷ் கொல்லன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

Actor Aryas saindhav movie marana mass first look out

பான் இந்திய படம்: இதில் முதன்மை கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்க, நவாசுதீன் சித்திக், ஆண்ட்ரியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இப்படம் டிசம்பர் 22ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் வெளியாக உள்ளது.

மரண மாஸ் லுக்: இப்படத்தில் ஆர்யா மனஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். நீண்ட தலைமுடி, ஸ்டைலான தோற்றத்தில் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு இருக்கும் ஆர்யாவின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. வெங்கடேஷின் 75வது படமான சைந்தவ் படத்தை மறக்க முடியாத படமாக மாற்றும் நோக்கில், தலைசிறந்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பணியாற்றி வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X