Actor Arya: புத்தாண்டுக்கு மட்டுமில்லயாம்.. வருஷம் முழுக்க ஆர்யா பிட்னஸ்ல சூப்பர்தானாம்!

சென்னை: நடிகர் ஆர்யா தொடர்ந்து சிறப்பான பல படங்களை, சிறப்பான இயக்குநர்களுடன் இணைந்து கொடுத்து வருகிறார். கோலிவுட்டின் முன்னணி நடிகராக தொடர்ந்து இருந்துவரும் ஆர்யாவின் நடிப்பில் சார்பட்டா பரம்பரை, எனிமி என கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான படங்கள், சிறப்பாக அமைந்தன. இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது மிஸ்டர் எக்ஸ், சார்பட்டா 2, ஆர்யா 37 ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்தப் படங்களுக்காக தன்னுடைய பிட்னசையும் அவர் சிறப்பாக்கி வருகிறார்.

வடசென்னையில் குத்துச்சண்டையை மையமாக கொண்டு பீரியட் படமாக வெளியானது சார்பட்டா பரம்பரை. இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஓடிடியில் இந்தப் படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பை பா ரஞ்சித் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், படத்திற்காக தன்னுடைய பிட்னசை சிறப்பாக்கி வருகிறார் ஆர்யா. இந்தப் படமும் பீரியட் படமாகவே உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Aryas workout video released with special message

நடிகர் ஆர்யா: நடிகர் ஆர்யா அறிந்தும் அறியாமலும் படம்மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து சாக்லேட் பாய் கேரக்டர்களிலும் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாகவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மலையாளியான ஆர்யா, இதுவரை மலையாளத்தில் இரு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கோலிவுட்தான் இவரை அள்ளி அணைத்துக் கொண்டது. நடிகர், தயாரிப்பாளர், பிசினஸ்மேன் என பன்முகங்களில் பணியாற்றிவரும் ஆர்யா, சைக்கிள் ரேஸ்களிலும் பங்கேற்று பல விருதுகளை பெற்றவர்.

அடுத்தடுத்த வீடியோக்கள்: சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஆர்யா, அதிகமான வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது தான் வொர்க் அவுட் செய்யும் புதிய வீடியோவை புத்தாண்டையொட்டி வெளியிட்டுள்ளார். இதில் கடினமான பயிற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். அடுத்தடுத்து மிஸ்டர் எக்ஸ், சார்பட்டா 2 மற்றும் ஆர்யா 37 படங்களில் தான் இணைந்து நடித்து வருவதாகவும் இந்த ஆண்டு தனக்கு மிகவும் கடினமான பணி ஆண்டாக இருக்கப் போவதாகவும் ஆர்யா குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு துவக்கம்: தனக்கு மிகவும் பிடித்தமான உடற்பயிற்சியின்மூலம் இந்த ஆண்டை துவங்கியுள்ளதாக கூறியுள்ள ஆர்யா, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் சார்பட்டா 2 படத்திற்காக அவர் நீண்ட தலைமுடியையும் வளர்த்து வருகிறார். கடந்த 2010ம் ஆண்டில் The Show people என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார் ஆர்யா. பல சிறப்பான படங்களில் நடித்திருந்தாலும் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்திருந்த சார்பட்டா படம் அவரது கேரியரில் மிகவும் சிறப்பாக அமைந்தது.

தி வில்லேஜ் வெப் தொடர்: சமீபத்தில் ஆர்யா நடிப்பில் தி வில்லேஜ் என்ற வெப் தொடர் வெளியானது. நெற்றிக்கண் படத்தை இயக்கியிருந்த மிலிந்த் ராவ் இந்தப் படத்தை இயக்கியிருந்த நிலையில், தமிழின் முதல் கிராபிக்ஸ் நாவல் வெப் தொடராக இது வெளியானது. இந்த தொடரின் டிரெயிலர் வெளியீட்டில் முன்னதாக பேசிய ஆர்யா, இந்த தொடர் நம் மணம் சார்ந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருந்ததாக பாராட்டு தெரிவித்திருந்தார். இருந்த போதிலும் இந்த தொடர், கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X