எப்படியோ பிழைத்துவிட்டேன்.. பணமில்லாததால் டிஸ்சார்ஜ் ஆன டிவி நடிகர்.. அந்த ஹீரோவுக்கு ரீச் ஆச்சா?

By

மும்பை: பணம் இல்லாததால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் பிரபல நடிகர்.

Recommended Video

Malaang Lip Lock | Viral Liplock Poster | Caree free Lip Lock

பிரபல இந்தி நடிகர், அசீஷ் ராய். 55 வயதான இவர், இந்தியில், 'நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்: த ஃபர்காட்டன் ஹீரோ' என்ற படத்தில் போலீஸாக நடித்து புகழ்பெற்றவர்.

மேலும், ஹோம் டெலிவரி, மேரே பஹேலா பஹேலா பியார், ராஜா நட்வாரியல், பர்கா உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

உடல்நிலை

உடல்நிலை

தம் தமா தம், யெஸ் பாச், ரீமிக்ஸ், மேரே ஆங்னே மே, ஆரம்ப் உட்பட பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். பல ஆங்கில படங்களுக்கு இந்தி டப்பிங்கும் பேசியுள்ளார். இவர் கடந்த மே மாதம் 18 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாததால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் தன்னிடம் சிகிச்சைக்குப் பணம் இல்லை என்றும் உதவுமாறும் கூறியிருந்தார்.

கொடுத்து விட்டேன்

கொடுத்து விட்டேன்

இது பாலிவுட்டிலும் சின்னத்திரை நடிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடன் நடித்த சக நடிகர்கள் உதவினர். இது பற்றி அவர் அளித்திருந்த பேட்டியில், என்னிடம் 2 லட்சம் ரூபாய் இருந்தது. மருத்துவனையில் சேர்ந்த 2 நாளிலேயே ரூ.2 லட்சம் பில் என்றார்கள். இருந்த பணத்தைக் கொடுத்து விட்டேன். என்னிடம் ஒரு பைசா இல்லை. இதனால் உதவி கேட்டேன்.

சிரீயசான நிலை

சிரீயசான நிலை

டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுகிறது. சிரீயசான நிலையில் இருக்கிறேன். பிழைப்பேனா இல்லையா என்பது ஒரு வாரத்துக்குள் தெரிவிடும்' என்று கூறியிருந்தார். நடிகர் சல்மான் கானிடம் உதவி கேட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் இப்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, சிகிச்சைக்கு அதிகமாக பணம் கொடுக்க முடியவில்லை.

சமாளித்து விட்டேன்

சமாளித்து விட்டேன்

இதனால் மே 24 ஆம் தேதியே வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். உதவியாளர் ஒருவர் கவனித்துக் கொள்கிறார். மிகவும் பலவீனமாக உணர்கிறேன். இருந்த பணத்தை வைத்து எப்படியோ சமாளித்து விட்டேன். இரண்டு நாளுக்கு ஒரு முறை மருத்துவமனை செல்கிறேன் 3 மணி நேர டயாலிசிஸ்க்கு இரண்டாயிரம் ரூபாய் கேட்கிறார்கள்.

சல்மான் கான்

சல்மான் கான்

நான் உதவி கேட்ட செய்தி, நடிகர் சல்மான் கான் காதுக்குச் சென்றதா என்பது தெரியவில்லை. அவரிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. இறந்துவிடுவேன் என்றே நினைத்தேன். ஆனால், பிழைத்துவிட்டேன். மீண்டும் உடல் நிலை சரியாகி நடிக்கத் தொடங்கிவிட்டால், உதவி செய்தவர்களிடம், பணத்தை நிச்சயம் திருப்பிக் கொடுத்துவிடுவேன்' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X