Ashish Vidyarthi - 57 வயதில் ஹனிமூன்.. ட்ரெண்டாகும் ஆஷிஷ் வித்யார்த்தியின் புகைப்படங்கள்
மும்பை: Ashish Vidyarthi (ஆஷிஷ் வித்யார்த்தி) நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சூழலில் தனது மனைவி ரூபாலியுடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.
ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் நடித்து வெகு பிரபலமாகியிருந்த சூழலில் தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த தில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ஆஷிஷ் வித்யார்த்தி. அறிமுகமான முதல் தமிழ் படமே கமர்ஷியல் ஹிட் அடித்தது. அதுமட்டுமின்றி ஆஷிஷ் வித்யார்த்தியின் எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களை கவர தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமைந்தன.

பாபா, பகவதி: அதனையடுத்து ரஜினி நடித்த பாபா படத்தில் அவர் ஏற்றிருந்த இ.போ ராமசாமி என்ற கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனையடுத்து, ஏழுமலை, பகவதி, தமிழ், தமிழன் ஆகிய படங்கள் என மொத்தம் அந்த வருடத்தில் மட்டும் ஐந்து தமிழ் படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி பிற மொழிகளிலும் பிஸியான நடிகராக வலம் வந்தார்.
கில்லியில் ஆஷிஷ்: தமிழில் அவரை பரவலாக அடையாளப்படுத்தியது கில்லி படம். தரணி இயக்கி விஜய் நடித்து மெகா ஹிட்டான படம்தான் கில்லி. அதில் விஜய்க்கு தந்தையாகவும், காவல் துறை அதிகாரியாகவும் கலக்கியிருந்தார். குறிப்பாக விஜய்யின் நண்பர்களின் பெயர் குறித்து அவர் பேசும் காட்சிகள் அப்ளாஸை அள்ளின. தொடர்ந்து ஆறு, என்னை அறிந்தால் என பல படங்களில் நடித்த அவர் கடைசியாக தமிழில் என் வழி தனி வழி படத்தில் நடித்திருந்தார்.
முதல் திருமணம்: ஆஷிஷ் வித்யார்த்தி பழம்பெரும் நடிகையான சகுந்தலா பருவாவின் மகளான ராஜோஷி பருவாவை திருமணம் செய்துகொண்டார். அவர் நடிகை, பாடகி, நாடக கலைஞர் என பன்முகத்திறமை கொண்டவர். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்னர் பிரிவில் முடிந்தது. இதனையடுத்து சில காலம் சிங்கிளாக இருந்தார் ஆஷிஷ் வித்யார்த்தி.
இரண்டாவது திருமணம்: இந்தச் சூழ்நிலையில் ரூபாலி பருவா என்பவரை சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணம் குறித்து பலரும் தங்களது விமர்சனத்தை முன்வைத்தனர். ஆனால் அதற்கு பதிலடி கொடுத்த ஆஷிஷ்,"60 வயதாகும் உனக்கு திருமணம் தேவையா? முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுத்து விட்டாயா? என்று பலர் என்னை விமர்சிக்கின்றனர். இந்த வயதில் இன்னொரு துணை எதற்கு என்றும் கேலி செய்கின்றனர். எல்லோரது வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்காது. வேறு வேறு நம்பிக்கையோடு வாழ்கிறோம்.

55 வயதிலேயே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன். அப்போதும் சர்ச்சை ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரூபாலியை சந்தித்து காதலித்தோம். கணவன் மனைவியாக வாழ முடிவு செய்து திருமணம் செய்துகொண்டோம். எனக்கு இப்போது 57 வயதுதான். இன்னும் 60 வயது ஆகிவிடவில்லை. காதலில் வயதுக்கு வேலை இல்லை" என தெரிவித்திருந்தார்.
ஹனிமூன்: இந்நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தியும், ரூபாலி பருவாவும் ஹனிமூன் சென்றிருக்கின்றனர். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தை பார்த்த பலரும் காதலுக்கு வயது தேவையில்லை என்று ஆஷிஷ் வித்யார்த்தி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











