Ashok selvan & Keerthi: அசோக் செல்வன் -கீர்த்திக்கு பிடிச்ச விஷயம் என்ன தெரியுமா.. பாக்கலாங்களா?

சென்னை: நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் திருமணம் சமீபத்தில் பிரபலங்கள் சூழ நடைபெற்று முடிந்துள்ளது.

இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்ததை தற்போது பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளனர். மேலும் இடையில் பிரேக்அப்பும் நடந்ததாம்.

Actor Ashok selvan and Keerthi pandian shares their personal things about marriage

தங்களுக்குள் எந்தெந்த விஷயங்களில் ஒத்துப் போகும் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை இவர்கள் தங்களது பேட்டியில் பகிர்ந்துள்ளனர்.

அசோக் செல்வன் -கீர்த்தி பாண்டியன் பேட்டி: நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, பீட்சா II : வில்லா போன்ற படங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியவர். இந்தப் படங்கள் அசோக் செல்வனுக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. சமீபத்தில் நடிகர் சரத்குமாருடன் இணைந்து அசோக் செல்வன் நடித்திருந்த போர் தொழில் படம் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தன. இந்தப் படத்திற்கு அதிகமான ப்ரமோஷன்களும் செய்யப்படாத நிலையில், படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 13ம் தேதி நடிகை கீர்த்தி பாண்டியனின் மகளை திருமணம் செய்துக் கொண்டார் அசோக் செல்வன். நெல்லையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். தும்பா, அன்பிற்கினியாள் போன்ற படங்களில் நடித்துள்ள கீர்த்தி பாண்டியன், பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள். அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்ததை தற்போது பேட்டியொன்றில் வெளிப்படுத்தியுள்ளனர்.

Actor Ashok selvan and Keerthi pandian shares their personal things about marriage

இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் பச்சைக்கொடி காட்ட, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணமும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் இணைந்து கொடுத்துள்ள பேட்டியில், தங்களுடைய பத்து ஆண்டுகள் காதல், பிரேக் அப் குறித்து பகிர்ந்துள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டில் கீர்த்தி பாண்டியனை புடவையில் சந்தித்த அசோக் செல்வன் முதல் சந்திப்பிலேயே விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அவர் மிகவும் அழகாக தெரிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இருவரையுமே சினிமாதான் இணைத்தது என்றும் இருவருக்கும் சினிமா குறித்து பேச அதிகமாக பிடிக்கும் என்று அசோக்செல்வன் தெரிவித்துள்ளார். மற்ற காதலர்கள் போல குட் மார்னிங், குட் நைட் மெசேஜெல்லாம் பகிர்ந்துக் கொள்ளாமல் மெச்சூர்ட்டாக காதல் செய்ததாக அசோக் செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்குள் அதிகமாக ஒத்துப் போகும் விஷயம் என்றால் அது சினிமாதான் என்று இருவரும் கூட்டாக தெரிவித்துள்ளனர். இருவருக்கும் சினிமா ரொம்ப பிடிக்கும் என்றும் தினந்தோறும் அதுகுறித்துதான் தாங்கள் அதிகமாக பேசுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 10 ஆண்டுகள் தொடர்ந்து காதலித்தாலும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 3 ஆண்டுகள் பிரிந்திருந்ததாகவும் மீண்டும் சந்திப்பு, மீண்டும் காதல் என தொடர்ந்த நிலையில் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X