அசோக் செல்வன் & கீர்த்தி பாண்டியன் திருமண அழைப்பிதழ்..எங்கு, எப்போது கல்யாணம் தெரியுமா?

சென்னை: அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமண அழைப்பிதழ் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் நவீன காதல் இளவரசனாக வலம் வரும் நடிகர் அசோக் செல்வன் தரமான கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஆரம்ப காலங்களில் பல குறும்படங்களில் நடித்து வந்த அசோக் செல்வன், பிளாக் எனும் குறும்படத்தை எழுதி இயக்கியும் உள்ளார்.

actor Ashok selvan and keerthi pandian wedding invitation trending on social media

நடிகர் அசோக் செல்வன்: 2012 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்த, அசோக் செல்வன், அந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா போன்ற நடிகர்களுடன் சேர்ந்து ரகளை செய்து இருப்பார். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு பல இளம் இயக்குனர்களின் பார்வை அசோக் செல்வன் மீது விழுந்தது. ஆனாலும், நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த அசோக் செல்வன், பீட்சா 2, தெகிடி, கூட்டத்தில் ஒருவன், சம் டைம்ஸ், ஓ மை கடவுளே போன்ற தரமான கதை அம்சம் உள்ள படங்களில் நடித்துள்ளார்

வெற்றி பெற்ற படங்கள்: இவர் நடித்த ஓ மை கடவுளே படம் அசோக் செல்வனை பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்த்தது. நேர்த்தியான கதைகளை தேர்வு செய்து அசத்தி கொண்டிருக்கும் அசோக் செல்வனின் சமீபத்திய படங்களான நித்தம் ஒரு வானம், போர் தொழில் போன்ற படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. அண்மைக்காலமாக இவருக்கு என்று பெண் ரசிகைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

காதல் திருமணம்: இந்நிலையில்,அசோக் செல்வன், நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவியது. இருவரும் ப்ளு ஸ்டார் என்ற கிரிக்கெட் கதையம்சம் கொண்ட படத்தில் சேர்ந்து நடித்து வரும் நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

திருமண தேதி: இவர்களின் காதலுக்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டதால், அடுத்த மாதம் 13ந் தேதி திருநெல்வேலியில் அருண்பாண்டினின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களின் திருமண அழைப்பிதழ் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலர் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகரும், இயக்குநருமான அருண் பாண்டியனின் கடைசி மகளான கீர்த்தி பாண்டியன் தும்பா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X