Actor Ashok selvan: அசோக் செல்வனுடன் ஜோடி போடும் ஐஸ்வர்யா லெக்ஷமி.. க்யூட் தலைப்புடன் உருவாகும் படம்

சென்னை: நடிகர் அசோக் செல்வன் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களுடன் ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்து வருகிறார். கடந்த ஆண்டில் சரத்குமாருடன் இணைந்து இவர் நடித்திருந்த போர் தொழில் படம் சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து சமீபத்தில் ப்ளூ ஸ்டார் என்ற வெற்றிப்படத்தையும் கொடுத்துள்ளார். தன்னுடைய இயல்பான நடிப்பால் தான் ஏற்கும் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துள்ளார். இந்த ஜோடி சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

தனக்கு திருமணம் குறித்த பயம் இருந்தபோது அதை தெளியவைத்து தைரியம் கொடுத்தவர் கீர்த்திதான் என்று தனது சமீபத்திய பேட்டியில் அசோக் செல்வன் கூறியுள்ளார். தனக்கும் கிர்த்திக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக கண்ட நாள் முதல் படத்தை இயக்கிய பிரியா வி இயக்கத்தில் தன்னுடைய அடுத்தப்படத்தில் அசோக் செல்வன் இணைந்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் விரைவில் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Ashok selvan going to join Aiswarya lekshmi for new movie named Pon Ondru Kanden

நடிகர் அசோக் செல்வன்: நடிகர் அசோக் செல்வன் அடுத்தடுத்த தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் தன்னை இணைத்து வெற்றிநாயகனாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டில் சரத்குமாருடன் இணைந்து போர் தொழில் படத்தில் நடித்திருந்தார். சைக்கோ திரில்லர் படமாக வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்பட வரிசையில் இணைந்தது. இந்நிலையில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே இவரது ப்ளூ ஸ்டார் படம் வெளியாகி சிறப்பான வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. கிரிக்கெட்டை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் அசோக் செல்வனின் இயல்பான நடிப்பால் வண்ணம் பெற்றுள்ளது.

அசோக் செல்வன் -கீர்த்தி ஜோடி: முன்னதாக கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துள்ளார் அசோக் செல்வன். தான் ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையில் சிறப்பான கெமஸ்ட்ரி அமைந்ததாகவும் திருமணம் குறித்த தனது பயத்தை போக்கி, கீர்த்திதான் தைரியம் கொடுத்தார் என்றும் தனது சமீபத்திய பேட்டியில் அசோக் செல்வன் கூறியுள்ளார். தான் தன்னுடைய இயலாமையை புலம்பலாக வெளிப்படுத்தும்போதெல்லாம் கீர்த்தி தன்னை தாங்கும் தோளாக மாறியுள்ளார் என்றும் எல்லாம் மாறிவிடும் என்று அவர் தன்னை அதிகமான முறை தேற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொன் ஒன்று கண்டேன் படம்: இந்நிலையில் அடுத்ததாக கண்ட நாள் முதல் படத்தை இயக்கிய பிரியா வி இயக்கத்தில் அடுத்தப்படத்தில் அசோக் செல்வன் கமிட்டாகியுள்ளார். படத்திற்கு பொன் ஒன்று கண்டேன் என்று பெயரிடப்பட்டுள்ளது. முக்கோண காதல் கதையாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் அசோக் செல்வனுடன் ஐஸ்வர்யா லெக்ஷமி, வசந்த் ரவி உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடிக்க கமிட்டாகியுள்ளனர், படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் முன்னதாக கவுதம் மேனன் இயக்கத்தில் பொன் ஒன்று கண்டேன் படம் அறிவிக்கப்பட்டு, கைவிடப்பட்டது. தற்போது அந்த டைட்டிலை பிரியா கையிலெடுத்துள்ளார்.

கவுதம் மேனன் படம்: கடந்த 2016ம் ஆண்டில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட படம்தான் பொன் ஒன்று கண்டேன். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க கமிட்டாகியிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த தலைப்புடன் இயக்குநர் பிரியா தற்போது அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெக்ஷமியுடன் களமிறங்கியுள்ளார். விரைவில் இத்நப் படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை தற்போது பிரியா முடுக்கிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X