ஷூட்டிங் முடிந்தது… அசோக் செல்வன் போட்ட உற்சாக பதிவு
சென்னை : தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் அசோக்செல்வன்.
குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி, பிறகு ஹீரோவாக மாறி சில நல்ல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் அசோக் செல்வன்.
இன்று ட்விட்டர் பக்கத்தில் அவரது அடுத்த படத்திற்கான தகவல் ஒன்றை பதிவிட்டு மகிழ்ச்சியை தெரியப்படுத்தியுள்ளார்.

மன்மத லீலை
அசோக் செல்வன் கடைசியாக நடித்து ரிலீசான படம் மன்மத லீலை. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். Covid காலகட்டத்தில் இந்த கதையை அசோக்செல்வன் இடம் சொல்லி இடைப்பட்ட காலகட்டத்தில் எடுத்து முடிக்கப்பட்ட படம். மன்மத லீலை வயது வந்தவர்களுக்கான படமாக எடுக்கப்பட்டுள்ளது. படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. வெங்கட் பிரபு போன்ற பெரிய இயக்குனரின் இயக்கத்தில் நடித்ததால் அசோக் செல்வன் இமேஜ் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது

Aha OTT இல் ரிலீஸ்
இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அந்த எதிர்பார்ப்புகளை ஓரளவுக்கு நிறைவேற்றிய படம் மன்மத லீலை. ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீசான இந்த படம் திரை அரங்குகளில் வெற்றியடைந்ததை தொடர்ந்து OTT க்கு வர உள்ளது. அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், மற்றும் ரியா சுமன் போன்ற நடிகர்கள் நடித்திருக்கும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ளது. திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஆஹா OTT தலம் இந்த படத்தை வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. மன்மத லீலை போன்ற படங்கள் திரையரங்குகளில் விட OTT தளத்தில் மிகப்பெரும் வெற்றி பெறும் என சொல்லப்படுகிறது.

புது இயக்குனருடன் அசோக் செல்வன்
மன்மத லீலை திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அசோக்செல்வன் இதற்கு முன்பு கமிட்டான படமான நித்தம் ஒரு வானம் படத்தில் கவனத்தை செலுத்தி வந்தார். இந்த படத்தின் இயக்குனருக்கு இது முதல் படம். இதற்கு முன்பு இவர் 14 படங்களில் வேலை செய்ததாகவும் சில விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார் எனவும் சொல்லப்படுகிறது. படத்தின் இயக்குனரான கார்த்திக் " இந்த கதை மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று வேறு வேறு நிலப்பரப்பில் நடப்பதாகவும் இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கை தரும் படியாக இருக்கும் எனவும் சொல்லியுள்ளார்.

ஷூட்டிங் முடிந்தது
அசோக் செல்வன் நித்தம் ஒரு வானம் படத்தின் போஸ்டர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதில் " நித்தம் ஒரு வானம் சூட்டிங் முடிந்தது. நான் நடித்த படங்களில் மிக அழகான படம். நித்தம் ஒரு வானம் எனக்குள்ளே ரொம்பவும் உற்சாகத்தை தந்த படம். இந்த படம் எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல். நாங்க என்ன மாதிரியான படம் பண்ணி இருக்கோம் அப்படின்னு சொல்ல ரொம்ப ஆவலா இருக்கேன். கூடிய விரைவில் சந்திக்கிறேன் வாழ்த்துக்களும் அன்பும் " என நெகிழ்ச்சியாக திரைப்படத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











