Ashok selvan: போர் தொழில் 2 கண்டிப்பாக வரும்.. கதை எப்படி இருக்கும்.. அசோக்செல்வன் பேட்டி!

சென்னை: நடிகர்கள் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடித்திருந்த போர் தொழில் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

அதிகமான ப்ரமோஷன்கள் செய்யப்படாவிட்டாலும் படத்தின் மேக்கிங் மூலமாகவே அதிகப்படியான வரவேற்பையும் வசூலையும் பெற்றது போர் தொழில்.

இரு தினங்களுக்கு முன்பு இந்தப் படம் ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Actor Ashok selvan opens up about Por thozhil 2 movie and its announcement

போர் தொழில் 2 படம் கண்டிப்பாக வரும் என அசோக் செல்வன் உறுதி: நடிகர்கள் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் போர் தொழில். கடந்த மாதம் ஜூன் 9ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்திற்கு அதிகமான ப்ரமோஷன்கள் எதுவும் செய்யப்படவில்லை. இருந்தபோதிலும் முதல் நாளின் சில ஷோக்களை தவிர்த்து இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடியது. இந்த ஆண்டின் சூப்பர்ஹிட் படங்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளது.

சைக்கோ த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட போர்த்தொழில் படத்திற்கு ரசிகர்கள் சிறப்பான ஆதரவை கொடுத்தனர். அறிமுக இயக்குநராக இருந்தபோதிலும் ரசிகர்களின் நாடியை உணர்ந்து சிறப்பான திரைக்கதையுடன் இந்தப் படத்தை அணுகியிருந்தார் விக்னேஷ் ராஜா. படத்தின் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் அதிகமான காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனியில் இருக்க செய்தது.

ஒரே மாதிரியாக கொல்லப்படும் அடுத்தடுத்த பெண்களின் கொலைகள் குறித்து துப்பறிய வருகிறார் சீனியர் அதிகாரி சரத்குமார். அவருடன் அசிஸ்டெண்ட்டாக இணைகிறார் அசோக் செல்வன். இவர்களுக்குள் துவக்கத்தில் பிணக்கு ஏற்பட அதை சரி செய்கிறார் நிகிலா விமல். தொடர்ந்து பெண்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட, ஒரு கட்டத்தில் நிகிலாவே கடத்தப்படுவதாக கதை க்ளைமேக்சிற்கு நகர்கிறது. தொடர்ந்து நிகிலாவை சரத்குமார், அசோக் செல்வன் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதாக கதை நிறைவடைகிறது.

Actor Ashok selvan opens up about Por thozhil 2 movie and its announcement

இந்த படத்தின் க்ளைமாக்சில் சரத்குமார் மற்றும் அசோக்செல்வன் இருவரும் அடுத்த கேசிற்காக புறப்படுவதாக நிறைவு செய்யப்பட்டது. இதையடுத்து படத்தின் இரண்டாவது பாகம் குறித்து, படத்தின் ரிலீசின்போதே பேசப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தனது சமீபத்திய பேட்டியில் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் கதை பல்வேறு விதங்களில் நகர ஆப்ஷன் உள்ளதாகவும் இந்தக் கதை குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன்தான் முடிவு செய்வார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

குறைந்த செலவில் எடுக்கப்பட்ட போர் தொழில் படம் 50 கோடிகளுக்கும் மேலாக சர்வதேச அளவில் வசூலித்துள்ளது. எளிமையான கதையிலும் மிரட்டலான திரைக்கதையிலும் ரசிகர்களை வெகுவாக வசீகரிக்கலாம் என்பதை தன்னுடைய அறிமுக படத்திலேயே நிரூபித்துள்ளார் விக்னேஷ் ராஜா. அதிகமான ப்ரமோஷன்கள் எதுவும் இன்றி word of mouth முறையிலேயே இந்தப் படம் ஏராளமான ரசகிர்களை கவர்ந்து தற்போது வெற்றிப்பட வரிசையில் இடம்பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X