அசோக் செல்வனின் “நித்தம் ஒரு வானம்’’… ஒரே படத்தில் இத்தனை ஹீரோயின்களா?
சென்னை : அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்த போஸ்டரை பெண்களின் கனவு நாயகன் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர், ஷிவதா என நான்கு நாயகிகள் நடித்துள்ளனர்.

அசோக்செல்வன்
ஓ மை கடவுளே திரைப்படத்தின் வெற்றிக்குப்பிறகு அசோக் செல்வன் கவனமாக கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சில நேரங்களில் சில மனிதர்கள்,ஹாஸ்டல், மன்மத லீலை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். அசோக் செல்வன் அடுத்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு நித்தம் ஒரு வானம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நித்தம் ஒரு வானம்
இந்த டைட்டில் லுக் போஸ்டரை பிரபல நடிகர் துல்கர் சல்மான் இன்று வெளியிட்டுள்ளார். அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர், ஷிவதா என பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இரு மொழிகளில்
பாலிவுட்டில் பிரமாண்ட படங்களை தந்த மிகப்பெரிய நிறுவனமான Viacom18 ஸ்டுடியோஸ், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் திரைப்படம் நித்தம் ஒரு வானம் . தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி உள்ள இத்திரைப்படத்திற்கு தெலுங்கில் ஆகாஷம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழில் தரமான படங்களை வழங்கி வரும் Rise East Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ரா கார்த்திக் இயக்கியுள்ளார்.

4 நாயகிகள்
நித்தம் ஒரு வானம் திரைப்படம் நம் மனதின் நேர்மறை எண்ணங்களையும், அன்பையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாகும். அசோக் செல்வனுக்கு ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர், ஷிவதா என 4 நாயகிகள் நடிக்க உள்ளனர். ஓ மை கடவுளே திரைப்படத்தில 2 நாயகிகளுடன் ஜோடி போட்ட அசோக் செல்வனுக்கு இந்த படத்தில 4 நாயகிகள். மனுஷன் என்னமாக வாழ்றாருப்பா...


Click it and Unblock the Notifications











