Thug life: தக் லைஃப் படத்தின் அடுத்த அப்டேட்.. ஜெயம் ரவி கேரக்டரில் இணையும் க்யூட் ஹீரோ!

டெல்லி: நடிகர் கமல்ஹாசன், திரிஷா, சிம்பு உள்ளிட்டவர்கள் நடித்து வரும் படம் தக் லைஃப். இந்த படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த சூழலில் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. முன்னதாக ஜெய்சல்மாரில் சில தினங்கள் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது, இந்நிலையில் தற்போது டெல்லியில் நடந்து வரும் சூட்டிங்கில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

30 ஆண்டுகளை கடந்து இந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்துள்ளனர். இந்த படத்துக்கு இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நாயகன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை புரட்டி போட்ட படமாக அமைந்த சூழலில் அதுபோன்ற ஒரு அனுபவத்தை தக் லைஃப் படம் கொடுக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் அதற்கு விடையாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Actor Ashok selvan seems to be replace Jayam ravi in Kamal haasan s thug life

தக் லைஃப் படம்: நடிகர் கமல்ஹாசன். திரிஷா. சிம்பு உள்ளிட்டவர்கள் நடித்து வரும் படம் தக் லைஃப். 30 ஆண்டுகளை கடந்து நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த சூழலில் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இங்கு தொடர்ந்து ஒரு மாத காலம் இந்த படத்தின் சூட்டிங் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த ஷூட்டிங்கில் நடிகர் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். துல்கர் சல்மான் கேரக்டரில் நடிகர் சிம்பு தற்போது நடித்து வருகிறார்.

ஜெயம்ரவி கேரக்டரில் இணையும் ஹீரோ: இதே போல ஜெயம் ரவி கேரக்டரில் யார் இணைவார்கள் என்பது குறித்து பல யூகங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. நடிகர் அரவிந்த்சாமி இந்த கேரக்டரில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஜெயம் ரவிக்கு பதிலாக நடிகர் அசோக் செல்வன் தக் லைஃப் படத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் தொடர்ந்து ஒரு மாத காலம் இந்த சூட்டிங் நடக்க உள்ள சூழலில் தொடர்ந்து செர்பியாவில் அடுத்த கட்ட சூட்டிங்கை நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக கடந்த மாதம் முதல் வாரத்திலேயே செர்பியாவில் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டது.

கால்ஷீட் குளறுபடிகள்: ஆனால் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் காரணமாக கமல்ஹாசன் செர்பியா ஷூட்டிங்கில் இணையவில்லை. இதனால் ஏற்பட்ட கால்ஷீட் குளறுபடிகளால் தான் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் டெல்லி ஷூட்டிங்கை தொடர்ந்து செர்பியாவில் அடுத்த கட்ட சூட்டிங்கை மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். படத்தில் சிம்புவிற்கு மிகவும் வெயிட்டான கேரக்டர் அமைந்துள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக த்ரிஷா இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் மேஜிக் நிகழ்த்திய சிம்பு மற்றும் திரிஷா ஜோடி தற்போது இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கமலின் அடுத்தடுத்த படங்கள்: தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள படம் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 அடுத்தடுத்து இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதத்தில் இந்தியன் 2 படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் கமல்ஹாசனின் கல்கி 2898 ஏடி படம் ரிலீசாகவுள்ளது. இந்த ஆண்டிலேயே கமல்ஹாசனின் அடுத்தடுத்த 3 படங்கள் ரிலீசாகவுள்ள சூழலில் தக் லைஃப் படமும் இந்த ஆண்டிலேயே ரிலீசாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆயினும் அடுத்த ஆண்டில்தான் இந்தப் படம் ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X