தெலுங்கில் அதிரடியாய் களமிறங்கும் அசோக் செல்வன்..’’நின்னிலா நின்னிலா’’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் அவுட் !

சென்னை : அதிக பெண் ரசிகைகளை கொண்டு இளம் நடிகராக வளர்ந்து வரும் நடிகர் அசோக் செல்வன் இப்பொழுது தெலுங்கிலும் அதிரடியாக களமிறங்குகிறார்.

சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கொள்ளை கொண்ட ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்த அசோக் செல்வன் இப்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதுவரை தமிழில் மட்டுமே அசோக் செல்வன் நடித்துவர இப்போது முதன்முறையாக நேரடி தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சூது கவ்வும்

சூது கவ்வும்

அஜித்குமாரின் மாஸான நடிப்பில் வெளியான பில்லா 2 திரைப்படத்தில் சிறுவயது பில்லாவாக புகைப்படத்தில் மட்டும் வந்து சென்ற அசோக்செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து சூது கவ்வும் என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பெண் ரசிகைகள்

பெண் ரசிகைகள்

சூது கவ்வும் திரைப்படம் வெற்றி பெற அது இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் பீட்சா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடித்து இருந்த அசோக் செல்வன், தெகிடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அதிக பெண் ரசிகைகளை கொண்டு அனைவராலும் விரும்பப்படும் இளம் நடிகராக வலம் வந்தார்.

தெலுங்கிலும் டப் செய்து

தெலுங்கிலும் டப் செய்து

தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத கதைக்களத்துடன் உருவான தெகிடி திரைப்படம் அனைத்து வகையான ரசிகர்களையும் கவர்ந்த நிலையில் இந்த திரைப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

தயாரிப்பாளராக அறிமுகம்

தயாரிப்பாளராக அறிமுகம்

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அசோக் செல்வன் சமீபத்தில் வெளியான "ஓ மை கடவுளே " என்ற படத்தை தனது சொந்த தயாரிப்பில் நடித்திருந்தார். இதன் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.

நேரடி தெலுங்கு திரைப்படத்தில்

நேரடி தெலுங்கு திரைப்படத்தில்

இவ்வாறு தமிழில் பட்டையை கிளப்பி வரும் அசோக் செல்வன் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு இருக்கும் நிலையில் இப்பொழுது, தெலுங்கிலும் மார்க்கெட் இருப்பதை அறிந்து கொண்டு நேரடி தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இரண்டு க்யூட்டான நடிகைகள்

இரண்டு க்யூட்டான நடிகைகள்

" நின்னிலா நின்னிலா" என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்து வர நித்யா மேனன் மற்றும் ரிது வர்மா என இரண்டு க்யூட்டான நடிகைகள் இதில் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

படிப்பு காட்சிகள்

படிப்பு காட்சிகள்

ஓ மை கடவுளே திரைப்படத்திற்கு பிறகு அசோக்செல்வன் நடித்து வரும் இந்த நின்னிலே நின்னிலே திரைப்படத்தின் படிப்பு காட்சிகள் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரல் ஆனதைத் தொடர்ந்து இப்பொழுது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் அனி.ஐ. வி. சசி இயக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X