கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் அசோக்செல்வன்.. எனக்கும் அதெல்லாம் இருந்துச்சு!

சென்னை : பல பிரபலங்களை தொடர்ந்து இப்போது நடிகர் அசோக்செல்வன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகராகவும் தற்போது தயாரிப்பாளராகவும் உள்ள அசோக் செல்வன் இப்பொழுது ஹாஸ்டல் என்ற திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து நடித்து வருகிறார்.

கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வரும் சூழலில் பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு வர ஏற்கனவே பல பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் இந்த வரிசையில் தற்பொழுது அசோக் செல்வன் தடுப்பூசி போட்டுக் கொண்டு தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இப்பொழுது தயாரிப்பாளராகவும்

இப்பொழுது தயாரிப்பாளராகவும்

தமிழ் சினிமாவில் பலரும் விரும்பும் இளம் நடிகராக உள்ள அசோக்செல்வன் சூதுகவ்வும் திரைப்படத்தில் நண்பர்களில் ஒருவராக வந்து பின் பீசா 2ல் கதாநாயகனாகவும் மாறினார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக கொண்ட அசோக்செல்வன் இப்பொழுது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.

மிகவும் பிடித்துப்போக

மிகவும் பிடித்துப்போக

காதலை மிகவும் வித்தியாசமான கோணத்தில் அதையும் பேண்டசி கலந்து சொல்லும் கதை போக்கில் உருவான ஓ மை கடவுளே கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது. குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடித்துப்போக பல விருதுகளையும் தட்டிச் சென்றது. இதில் விஜய் சேதுபதி கடவுளாக சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார்.

Recommended Video

Mask சரியா போடுங்க.. பொறுப்பா இருங்க - Vetrimaran
சரித்திர திரைப்படத்தில்

சரித்திர திரைப்படத்தில்

தமிழைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான தீனி தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியாக தற்போது மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் மரக்கார் என்ற சரித்திர திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு

தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவியும் ஆயிரக்கணக்கான உயிர் பலிகளையும் வாங்கிக் கொண்டிருக்கும் சூழலில் மக்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்ட திரை பிரபலங்களும் ஒன்றன்பின் ஒன்றாக தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அசோக் செல்வனும் தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை உள்ளது

நம்பிக்கை உள்ளது

நீண்டகாலமாகவே தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றிய பல்வேறு சந்தேகங்களும் தயக்கங்களும் மற்றவர்களைப் போல என்னிடம் இருந்தது. தற்போது உரிய மருத்துவர்களிடமும் அது சம்பந்தப்பட்ட துறையினரிடமும் பலமுறை ஆலோசனை செய்து இந்த கொடுமையான கொரோனா சங்கிலியை உடைக்க வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முடிவெடுத்து தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளேன். கொரோனா விஷயத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மிகச் சரியான பாதையை நோக்கி செல்கிறோம் என்பதில் நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X