கொரோனா பீதி.. டப்பிங் முடித்த கையோடு தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகர்!
சென்னை: கொரோனா பீதி காரணமாக பிரபல நடிகர், டப்பிங் முடித்தக் கையோடு தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக கூறியுள்ளார்.
Recommended Video
நடிகர் அஷ்வின், அஜித்துடன் மங்காத்தா, வேதாளம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மேலும் 7ஆம் அறிவு, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, பிரியானி, மேகா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன்
இது வேதாளம் சொல்லும் கதை, தொலைக்காட்சி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கிறார் அஷ்வின் ககுமனு.

விநாயகர் சதுர்த்தி
பொன்னியின் செல்வன் படத்தில் அஷ்வின் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் அஷ்வின் ககுமனு தனது டிவிட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துடன் ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.

டப்பிங் முடித்தேன்
அதாவது இந்த லாக்டவுன் நேரத்தில் ஒரு குறும்படத்தை இயக்கியிருப்பதாக கூறியுள்ளார். மேலும் ஒரு தொடருக்கு டப்பிங் முடித்ததாகவும் தெரிவித்துள்ளார். டப்பிங் முடித்த கையோடு தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அஷ்வின் ககுமனு கூறியுள்ளார்.

பாராட்டு
சமீபத்தில் அமிதாஷ் பிரதான் மற்றும் இந்து ரவிச்சந்திரன் ஆகியோரின் கொரோனா கண்ணால பாடலுக்காக பாராட்டை தெரிவித்திருந்தார் அஷ்வின். கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பார்ட்டிகளுக்கான உங்கள் நடன நிகழ்ச்சியை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











