கொரோனாவை அன்றே கணித்த தல அஜித் படக்குழு.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் வைரல் புகைப்படம்!
சென்னை: தல அஜித்தின் மங்காத்தா படத்தின் ஷூட்டிங்கிலே கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தல அஜித்தின் மங்காத்தா படத்தில் நடித்த அஸ்வின் ககுமனு, சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இப்பொழுது வைரலாகி கொண்டு இருக்கிறது.
அந்த புகைப்படத்தில் தல அஜித்துடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அவருடன் பணியாற்றிய அனுபவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

மங்காத்தா
கோலிவுட்டின் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று வெங்கட் பிரபு இயக்கி தல அஜித் நடித்த மங்காத்தா. இந்த படத்தில் அஜித் தனது மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்று இருந்தார். மேலும் இதில் திரிஷா, ஆண்ட்ரியா, அஞ்சலி, அர்ஜுன், மகத், பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இருந்தனர். இந்த படத்தில் தான் அஸ்வின் ககுமனு அஜித்துடன் இணைந்து நடித்து இருப்பார். இந்நிலையில் மங்காத்தா படம் வெளிவந்து 9 ஆண்டுகள் நிறைவான நிலையில் அஜித்துடன் தான் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார் அஸ்வின் ககுமனு.

அப்படி என்ன போட்டோ?
மங்காத்தா படம் ரிலீஸ் ஆகி 9 வருடங்கள் கடந்த நிலையில், இளம் நடிகர் அஸ்வின் ககுமனு ஒரு BTS புகைப்படத்தைப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், இயக்குனர் வெங்கட் பிரபு தல அஜித்துக்கு ஒரு காட்சியை விவரிப்பதைக் காணலாம். அதே நேரத்தில் அஸ்வின் ககுமனு, அவர்களுக்கு அருகில் மாஸ்க் அணிந்தபடி நிற்பதையும் காணலாம்.

டைம் ட்ராவல்
இந்த புகைப்படத்தை அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் "மங்காத்தா படம் வெற்றிகரமாக 9 ஆண்டுகளை கடந்த நிலையில் நான் இந்த 'த்ரோ பேக்' புகைப்படத்தை வெளியிடுவதாகவும், மேலும் படத்தின் ஒரு காட்சியில், ரயிலில் ஏ.சி.பி பிருத்வியுடன், விநாயக் மகாதேவ் தொலைபேசியில் உரையாடுவது போன்று எடுக்கப்பட்ட ஒத்திகை போட்டோவே இது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் 2020 இல் இருந்து அந்த காட்சிக்கு டைம் ட்ராவல் செய்தது போன்று உணர்கிறேன்" என்றும் பதிவிட்டு உள்ளார்.

மாஸ்க் அணிந்தபடி
அஜித் மற்றும் வெங்கட் பிரபு இடம் பெற்று இருக்கும் இந்த புகைப்படத்தில், அஸ்வின் ககுமனுவும், இன்னொருவரும் மாஸ்க் அணிந்துள்ளனர். இதை பார்த்த நெட்டிசன்ஸ், ஏன் ப்ரோ இந்த மாஸ்க்?? கொரோனா விழிப்புணர்வை மங்காத்தா படத்துலே ஸ்டார்ட் பண்ணிட்டிங்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். கொரோனாவுக்கு பின் நடத்தப்பட்ட அஜித் படத்தின் ஷூட்டிங் போட்டோ மாதிரியே இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய ரோலில் நடிகர் அஸ்வின் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. வந்தியத்தேவனின் நண்பன் ரோல் என்று கூறுகின்றனர். ஆனால், அது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை. மேலும், இது வேதாளம் சொல்லும் கதை, தொல்லைக்காட்சி ஆகிய படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications











