பொன்னியின் செல்வனில் நடிக்கும் மங்காத்தா அஸ்வின் ககுமனு

சென்னை: மணிரத்னம் இயக்கவிருக்கும் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், தற்போது புதிதாக அஸ்வின் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை நடிகர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் சுந்தர சோழனாக அமிதாப் பச்சன், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், மற்றும் குந்தவை நாச்சியார் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Actor Ashwin will be acting in Epic Film Ponniyin Selvan

மங்காத்தா படம் மூலம் நமக்கு அறிமுகமானவர் அஸ்வின் ககுமனு. இவர் அதற்கு பிறகு 7ஆம் அறிவு படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அஸ்வின் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த, இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய, அதற்கு பிறகு மேகா உள்பட பல படங்களில் நடித்தார். அஸ்வின் சுனைனாவுடன் இணைந்து நிலா நிலா ஓடி வா எனும் இணைய தொடரிலும் நடித்திருந்தார்.

தற்போது அஸ்வின் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அஸ்வின்.

அதில், அஸ்வின் தான் கல்லூரி மாணவனாக இருக்கும் போதே மணிரத்னத்தின் ஆய்த எழுத்து படத்துக்காக பின்னணி இசையில் வேலை செய்ததையும் நினைவு கூறியுள்ளார்.

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் காட்சி வடிவில் மாற்ற களமிறங்கியுள்ளார். மிகுந்த பொருட் செலவில் உருவாகவுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான வேலையில் அவர் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

தற்சமயம் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இணைய உள்ளது. நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், ஜஸ்வர்யா ராய், அமலா பால், அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதில் ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் நந்தினியின் தாயாரான மந்தாகினி தேவி கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இது தவிர சுந்தர சோழனாக அமிதாப் பச்சன், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், மற்றும் குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X