ரிசார்ட்டில் 'அஞ்சான்' பட நடிகர் மர்ம மரணம்.. தூக்கில் தொங்கிய நிலையில் உடல் மீட்பு.. தற்கொலையா?
மும்பை: பிரபல நடிகர், தனியார் கெஸ்ட் ஹவுசில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த கொரோனா காலகட்டத்தில் சினிமா துறையில் ஏராளமான மரணங்கள் நடந்துள்ளன.
இது தொடர்ந்து நடந்து கொண்டே வருவது, சினிமா துறையினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அனுராக்கின் பிளாக் ஃபிரைடே
இந்நிலையில், பிரபல இந்தி நடிகர் ஆசிஃப் பஸ்ரா திடீரென மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர், இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அனுராக் காஷ்யபின் பிளாக் ஃபிரைடே, ரஜத் முகரிஜி இயக்கிய லவ் இன் நேபாள், ராகுல் தோலாக்கியா இயக்கிய பர்ஸானியா, பாதல் லோக் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

அஞ்சானில் கேரக்டர்
தமிழில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். மலையாளம், குஜராத்தி மொழி படங்களிலும் நடித்துள்ள ஆசிஃப் பஸ்ரா, சமீபத்தில் ஹாட் ஸ்டாரில் வெளியான ஹோஸ்டேஜஸ் என்ற வெப் சீரிஸிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

மேக்லியாட் கன்ச்
நடிகர் ஆசிஃப் பஸ்ரா, இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவின் புறநகர் பகுதியான மேக்லியாட் கன்ச் என்ற பகுதியில் கடந்த 5 வருடமாக வசித்து வந்தார். வெளிநாட்டு காதலியுடன் அவர் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அருகில் உள்ள, தனியார் ரிசார்ட் ஒன்றில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

தடயங்கள் சேகரிப்பு
அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் அதிகாரிகள் தடயங்களை சேகரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர.

வெளிநாட்டு காதலி
பிரபல நடிகர் ஒருவர் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார், அவருடைய வெளிநாட்டு காதலி எங்கே சென்றார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











