நடிகர் சங்கத் தேர்தல்: நாசர், விஷால், கார்த்தி மகத்தான வெற்றி பாண்டவர் அணிக்கு கிடைத்த வாக்கு விவரம்

சென்னை : நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச்செயலாளராக விஷால் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019ல் நடந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையில் பாண்டவர் அணியும் போட்டியிட்டனர்.

இத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

நடிகர் சங்கத் தேர்தல்

நடிகர் சங்கத் தேர்தல்

தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தனர். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் செல்லும் என்றும், வாக்குகள் எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது.

வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது

வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது

இதையடுத்து, 3 ஆண்டுகளுக்கு இன்று காலை 8 மணி முதல் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குகள் எண்ணப்பட்ட. காலை வாக்குப்பதிவு தொடங்கும் போதே வாக்கு எண்ணிக்கையில் அதிக வித்தியாசம் இருப்பதாக கூறி பாக்யராஜ் அணியினர் வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்பட்டது. சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.

விஷால், கார்த்தி வெற்றி

விஷால், கார்த்தி வெற்றி

இதையடுத்து, தற்போது நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்கு எண்ணி முடிக்கப்பட்டுள்ளது. இதில், நாசர் தலைமையிலான விஷால், கார்த்தி அணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் 1720 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐசரி கணேஷ்1032 வாக்குகளை பெற்றுள்ளார். பாண்டவர் அணி சார்பில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் 1612 வாக்குகளும், கருணாஸ் 1605, நாசர் 1701 வாக்குகளும், பாக்யராஜ் 1054 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

குவியும் வாழ்த்து

குவியும் வாழ்த்து

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்க இருக்கும் நிர்வாகிகளுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பாராட்டுக்ளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது. மேலும், பல பிரபலங்களும் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X