வெப் சீரிஸில் அறிமுகமாகும் நடிகர் அதர்வா!
சென்னை: சண்டிவீரன் படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு மீண்டும் சற்குணம் இயக்கத்தில் அதர்வா கபடி வீரராக புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்
தெலுங்கில் வெற்றி பெற்ற நின்னுக்கோரி தமிழில் தள்ளிப்போகாதே என்ற பெயரில் அதர்வாவின் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. இந்த திரைப்படம் பல தேதிகள் அறிவிக்கப்பட்டு இறுதியாக டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதுவரை படங்களில் மட்டுமே நடித்து வந்த அதர்வா முதல் முறையாக வெப் சீரிஸில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

ஆக்சன் ஹீரோவாக மாறி
தமிழ் சினிமாவில் இளம் முன்னணி நடிகராக முன்னேறி வரும் நடிகர் அதர்வாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்று வருகிறது. இதுவரை சாக்லேட் பாயாக இருந்த அதர்வா சமீபகாலமாக ஆக்சன் கதைகளை தேர்ந்தெடுத்து மெல்ல மெல்ல ஆக்சன் ஹீரோவாக மாறி வருகிறார். அந்த வகையில் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் வெளியான 100 திரைப்படம் இவருக்கு ஆக்சன் ஹீரோ அந்தஸ்தை பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் சாம் ஆண்டன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் . முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் எடுத்து முடிக்கப்பட்டது.

கபடி விளையாட்டை மையமாக
சண்டிவீரன் வெற்றிக்கு பிறகு சற்குணம் மற்றும் அதர்வா இணைந்து பணியாற்றாமல் இருந்தனர். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து புதிய திரைப்படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர். கபடி விளையாட்டை மையமாக கொண்ட கிராமத்து பின்புலத்தில் உருவாகும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது இதன் படப்பிடிப்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஜிப்ரான் இசையமைக்கிறார் .

திரில்லர் கதை களத்தில்
தெலுங்கில் நானியின் நடிப்பில் வெளியான சூப்பர் திரில்லர் திரைப்படம் நின்னுக்கோரி தமிழில் தள்ளிப்போகாதே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. காதல் மற்றும் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அதர்வா ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். அனுபமா கொடி படத்திற்கு பிறகு நீண்ட வருடங்களுக்குப்பிறகு தமிழில் தள்ளிப்போகாதேவில் நடித்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இந்த படத்தை இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது இறுதியாக டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

வெப் சீரிஸில் அறிமுகம்
இவ்வாறு தமிழ் சினிமாவில் மிக பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் அதர்வா முதல் முறையாக வெப் சீரிஸில் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. புதிய இயக்குனருடன் கூட்டணி அமைத்து உருவாகவுள்ள இந்த வெப் சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











