அஞ்சாம் பத்திரா தமிழ் ரீமேக்கில் அதர்வா... பாலிவுட்டுக்கும் கிளம்பும் படம்

சென்னை : கடந்த 2020 ஜனரி 10ம் தேதி மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும் வசூல் மழையையும் பொழிந்த படம் அஞ்சாம் பத்திரா.

இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்கு பெரும் போட்டி நிலவிய நிலையில் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஆஷிக் உஸ்மான் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஏபி இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் படத்தை இணைந்து தயாரிக்கவுள்ளன.

இதேபோல தமிழிலும் இதன் ரீமேக் உறுதியாகியுள்ளது. படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கவுள்ளார்.

த்ரில்லர் படம்

த்ரில்லர் படம்

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான த்ரில்லர் படம் அஞ்சாம் பத்திரா. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகுந்த வரவேற்பை பெற்றது. படத்தில் முக்கிய வேடங்களில் குஞ்சாகோ போபன், ஷரஃப்பு தீ, உன்னிமயா பிரசாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சிறப்பான இயக்கம்

சிறப்பான இயக்கம்

காவல்துறையினரை தொடர் கொலைகள் செய்யும் கொலைகாரனை கண்டுபிடிக்கும் த்ரில்லர் கதையாக வெளிவந்த இந்த படத்தை ஆஷிக் உஸ்மான் தயாரித்திருந்தார். மற்றும் மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கியிருந்தார். மிகுந்த பரபரப்பான திரைக்கதையை அளித்திருந்தார் இயக்குநர்.

கடுமையான போட்டி

கடுமையான போட்டி

இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பெற கடுமையான போட்டியே நிலவியது. இந்நிலையில் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஆஷிக் உஸ்மான் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஏபி இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் படத்தை இணைந்து தயாரிக்கவுள்ளன.

அதர்வா நாயகன்

அதர்வா நாயகன்

இதனிடையே தமிழிலும் ரீமேக் உறுதியாகியுள்ளது. நாயகனாக அதர்வா நடிக்கவுள்ளார். இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்டவர்களின் தகவல்கள் வெளியாகவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். சாக்லேட் பாய் வேடங்களில் நடித்துவரும் அதர்வாவிற்கு இந்த கதைக்களம் சிறப்பாக அமையும் என்றும் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X